தண்டவாளத்தில் பராமரிப்பு பணி இரு ரயில்கள் சேவையில் மாற்றம்


கரூர்:
கரூர் அருகே, ரயில்வே தண்டவாளத்தில் நேற்று பராமரிப்பு பணிகள் நடந்தன. இதனால், இரண்டு ரயில்கள் சேவையில் மாற்றம் செய்யப்பட்டது.
கரூர் - திருச்சி ரயில்வே வழித்தடத்தில், ரயில் தண்டவாளங்களில் பராமரிப்பு பணிகள் நேற்று நடந்தது. இதனால், கேரளா மாநிலம், பாலக்காட்டில் இருந்து, திருச்சி வரை இயக்கப்பட்ட
பயணிகள் ரயில் நேற்று, கரூரில் நிறுத்தப்பட்டது. அதேபோல், மயிலாடுதுறையில் இருந்து சேலம் வரை இயக்கப்படும் எக்ஸ்பிரஸ் ரயில் நேற்று,
வீரராக்கியத்தில் நிறுத்தப்பட்டது.
பராமரிப்பு பணிகள் நிறைவு பெற்றதும், இன்று முதல் வழக்கம் போல், பாலக்காடு - திருச்சி
பயணிகள் ரயிலும், மயிலாடுதுறை - சேலம் எக்ஸ்பிரஸ் ரயிலும் இயக்கப்படும் என, ரயில்வே துறை
அதிகாரிகள் தெரிவித்தனர்.

Advertisement