புனித வெள்ளியை முன்னிட்டு தேவாலயங்களில் சிறப்பு திருப்பலி


கரூர்:புனித வெள்ளியை முன்னிட்டு, கரூரில் உள்ள தேவாலயங்களில் சிறப்பு திருப்பலி நேற்று நடந்தது.
உலகம் முழுவதும் உள்ள கிறிஸ்தவர்கள், இயேசு கிறிஸ்துவின் சிலுவைபாடு களை, நினைவு கூறும் வகையில் கடந்த பிப்., மாதம் சாம்பல்
புதனுடன் தவக்காலம் தொடங்கியது. ஈஸ்டர் பண்டிகைக்கு முந்தைய ஞாயிறை, குருத்தோலை ஞாயிறாக கிறிஸ்தவர்கள் கடந்த, 13 ல் அனுசரித்தனர்.
அதன் தொடர்ச்சியாக, நேற்று கரூர் புனித தெரசம்மாள் ஆலயம், சர்ச் கார்னர் சி.எஸ்.ஐ., சர்ச், பசு
பதிபாளையம் புனித கார்மேல் அன்னை பேராலயம் உள்ளிட்ட, பல்வேறு தேவாலயங்களில் புனித வெள்ளியை முன்னிட்டு, சிறப்பு திருப்பலி நடந்தது. இதில், ஏராளமான கிறிஸ்தவர்கள் பங்கேற்றனர்.
புனித கார்மேல் அன்னை பேராலயத்தில் நடந்த நிகழ்ச்சியில், அருட்தந்தை பிச்சை முத்து மற்றும் அருட் சகோதரிகள் பங்கேற்றனர். முன்னதாக, சிலுவை தாங்கிய ஊர்வலம் நடந்தது.
சிறப்பு திருப்பலிக்கு பிறகு, நோன்பு முறிவு உணவு வழங்கப்பட்டது. நாளை, இயேசு கிறிஸ்து உயிர்ப்பு பெருநாளான, ஈஸ்டர் பண்டிகை கிறிஸ்தவர்களால் கொண்டாடப்பட உள்ளது.
* அரவக்குறிச்சியில் உள்ள துாய தோமா ஆலயம், புனித சவேரியார் ஆலயம், பள்ளப்பட்டி துாய பவுல் ஆலயம், சவுந்தராபுரம் நல்ல மேய்ப்பன் ஆலயம் உள்ளிட்ட பல்வேறு தேவாலயங்களில் புனித வெள்ளியையொட்டி, சிறப்பு திருப்பலி நடந்தது.
ஏராளமான கிறிஸ்தவர்கள் பங்கேற்றனர். பல்வேறு திருச்சபைகளில் சிறப்பு திருப்பலிக்கு பிறகு, நோன்பு முறிவு உணவு வழங்கப்பட்டது.

Advertisement