நொய்யல் செல்லாண்டியம்மன் கோவிலில் தேரோட்ட விழா

கரூர்:நொய்யல், செல்லாண்டி அம்மன் கோவில் திருவிழாவையொட்டி, தேரோட்டம் நடந்தது.

கரூர் மாவட்டம், நொய்யல் செல்லாண்டி அம்மன் கோவிலில், தேரோட்ட திருவிழா கடந்த, 9ல் பூச்சாட்டுதலுடன் தொடங்கியது. அதை தொடர்ந்து,

நாள்தோறும் மூலவர் அம்மனுக்கு சிறப்பு அபிேஷகம் நடத்தப்பட்டு, தீபாராதனை காட்டப்பட்டது. நேற்று முன்தினம் இரவு, தேரோட்டம் நடந்தது. அதில், ஏராளமான பக்தர்கள் பங்கேற்று வடம் பிடித்து தேரை இழுத்து நேர்த்திக்கடன் செலுத்தினர். பிறகு, வாணவேடிக்கை நிகழ்ச்சி நடந்தது.

நேற்று மாவிளக்கு ஊர்வலம், பொங்கல் வைத்தல் ஆகிய நிகழ்ச்சிகள் நடந்தன. பிறகு, சிறப்பு அலங்காரத்தில் மூலவர் அம்மன் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். மாலை உற்சவர் அம்மன் திருவீதி உலா, மஞ்சள் நீராட்டும் நிகழ்ச்சி நடந்தது.

Advertisement