மகள் மாயம்; தாய் புகார்


கரூர்:வெள்ளியணை அருகே, மகளை காணவில்லை என, போலீசில் தாய் புகார் செய்துள்ளார்.
நாமக்கல் மாவட்டம், ஜேடர்பாளையம் பகுதியை சேர்ந்தவர் சந்தோஷ்குமார், 27; இவர் பிருந்தா, 20, என்ற பெண்ணை ஆறு மாதங்களுக்கு முன் காதலித்து திருமணம் செய்து கொண்டார். இந்நிலையில், சந்தோஷ் குமாருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக பிருந்தா, வெள்ளியணை அருகே மேல் லட்சுமணப்பட்டியில் உள்ள தாய் அன்னக்கொடி, 43, வீட்டில் கடந்த சில நாட்களாக தங்கியிருந்தார்.
இந்நிலையில் கடந்த, 16 இரவு வீட்டில் இருந்து வெளியே சென்ற பிருந்தா, வீடு திரும்பவில்லை. இதனால், அதிர்ச்சியடைந்த பிருந்தாவின் தாய் அன்னக்கொடி, போலீசில் புகார் செய்தார்.
வெள்ளியணை போலீசார் விசாரிக்கின்றனர்.

Advertisement