மன உளைச்சல் தரும் மறைமுக செலவு கணித்துக்கொண்டால் இல்லை கவலை
சொந்த இல்லம் என்பது ஒவ்வொருவரின் கனவு. அதுவும், வாடகை வீடுகளில் வசிப்பவர்களுக்குதான் சொந்த வீட்டின் அருமை நன்கு தெரியும். எனவே, வீட்டு கடன், அடமானம் வாயிலாக வீடு கட்டுவது தற்போது அதிகரித்து வருகிறது.
இப்படி, கஷ்டப்பட்டு வீடு கட்டுவோர், திட்டமிட்டு செலவிட வேண்டியது அவசியம். இல்லையேல் கூடுதல் செலவுகளுக்கு ஆளாக நேரிடும்.
இதுவே மன உளைச்சலுக்கும் வழிவகுக்கும். கட்டடத்தை மட்டுமே கணக்கில் கொள்பவர்கள், மறைமுக செலவுகளை கவனிக்க மறந்துவிடுவதுண்டு.
இச்சூழலில், வீடு கட்டும் முன்பே, இதர மறைமுக செலவுகளை கணித்து, கூடுதல் செலவுகளை தவிர்க்க முடியும். எலக்ட்ரிக்கல் பொருட்கள், ஏசி, சிம்னி, பேன், லைட்ஸ், பெயின்டிங், மாடுலர் கிச்சன், வாட்ரோப், ஜன்னல் திரைகள் ஆகியவற்றை, இந்த பட்டியலில் வைத்துக்கொள்ள வேண்டும்.
தவிர, மோட்டார் மற்றும் வீட்டிற்கான வரி, நல்ல தண்ணீர் இணைப்பு, மின் இணைப்பு மாற்றுதல், இத்துடன் கண்டிப்பாக ஒவ்வொரு வீட்டிற்கும், சோலார் பேனல் அமைப்பதையும் நினைத்துக் கொள்ள வேண்டும். மேற்கண்ட மறைமுக செலவுகளை, முன்பே கணித்துக் கொண்டால் வீட்டை எளிதாக கட்டி முடித்து குடியேறலாம் என்கின்றனர் பொறியாளர்கள்.
மேலும்
-
டில்லி வீரர்கள் அபாரம்; குஜராத்துக்கு 204 ரன்கள் இலக்கு
-
நக்சல்களின் 12 பதுங்கு குழிகள் அழிப்பு: சத்தீஸ்கரில் பாதுகாப்பு படை தீவிரம்
-
காசாவில் இஸ்ரேல் தொடர் தாக்குதல்; 48 மணி நேரத்தில் 90 பேர் பலி
-
பிரதமர் மோடியுடன் பேசியது கவுரவம்: எலான் மஸ்க் பெருமிதம்
-
விசைத்தறியாளர்கள் போராட்டம்: பா.ஜ., ஆதரவு
-
8 வயது சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை; 10ம் வகுப்பு மாணவன் கைது