கட்டுமானத்தின் முதுகெலும்பு தொழிலாளர்கள் அவர்களை பாதுகாப்பது ரொம்ப முக்கியமுங்க!

கட்டுமான பணியின் முதுகெலும்பாக இருப்பவர்கள் தொழிலாளர்கள். எனவே, அவர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை செய்துகொடுக்க வேண்டியது பொறியாளரின் கடமை.

தொழிலாளர்கள் தங்கும் இடம் சுகாதாரமானதாக இருக்கிறதா, பாதுகாப்பு தன்மையுடன் இருக்கிறதா என்பதை கவனிக்க வேண்டும்.

மழை, வெயில் காலங்களில் போதிய முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ள போதிய வசதிகள் உள்ளனவா என்பதை முதற்கண் பார்க்க வேண்டும்.

குறிப்பாக, அவர்களுக்குள் சண்டை, சச்சரவு ஏற்படாதவாறு, அவரவர் தேவைகளுக்கேற்ப கருவிகளை கொடுத்து, அனைவரும் ஒற்றுமையுடன் பணிபுரிய வகை செய்ய செய்ய வேண்டும்.

'கொசினா' உறுப்பினர் மாரிமுத்துராஜ் கூறியதாவது:

l மாதம் ஒருமுறை பணியாளர்களை வெளியிடங்கள், பொழுதுபோக்கு இடங்களுக்கு அழைத்துசெல்ல வேண்டும். அவர்கள், பணிசூழல் கவலையை மறந்து, மகிழ்ச்சியான மனநிலையுடன் கடுமையாக பணிபுரிய உதவும்.

l உடல் நலக்குறைவுள்ளவர்களை எக்காரணம் கொண்டும், வேலை செய்ய அனுமதிக்கக்கூடாது.

l பணிபுரிகின்ற அத்தனை பேரும் ஹெல்மெட் அணிந்துள்ளார்களா, உயரமான இடத்தில் பணிபுரிபவர்கள் பெல்ட் அணிந்துள்ளனரா, சாரம் நல்ல முறையில் போடப்பட்டுள்ளதா, உயரமான இடத்தில் நடந்துசெல்ல, கைப்பிடி கம்பி கட்டப்பட்டுள்ளதா என, கண்காணிப்பது அவசியம்.

l ஆட்கள் வேலை செய்யும் இடத்தில், மின் இணைப்பு பாதுகாப்புடன் இருக்க வேண்டும். தொழிலாளர்களுக்கு போதிய ஓய்வுநேரம் கொடுத்து, வேலை செய்ய சொல்ல வேண்டும். இரவு, பகலாக யாரையும் வேலை செய்யக்கூறி கட்டாயப்படுத்தக்கூடாது.

l குறிப்பிட்ட கால அளவுக்குள், பணிகளை முடித்தவர்களுக்கு ஊக்கத்தொகை கொடுத்து உற்சாகப்படுத்த வேண்டும்.

l பணி பாதுகாப்பு, அதாவது தொடர்ந்து வேலை இங்கே இருக்கும் என்கிற நம்பிக்கை கொடுப்பது, அவர்கள் கவனம் சிதறாமைக்கு வழிவகுக்கும். மகிழ்ச்சியான சூழலால் மனநிறைவாக பணிகளும் வேகமெடுக்கும்.

இவ்வாறு, அவர் கூறினார்.

Advertisement