நம் திருக்குறள்... உலகின் குரல் எழுத்தாளர் சுஜாதா சொன்னார்...நான் செய்தேன்!

மறைவாய் நமக்குள்ளே பழங்கதைகள் கூறுவதிலோர் மகிமையில்லை.
--பாரதியின் வாக்கு இது.
நம்மிடம் இருக்கும் நுால்களை அப்படியே வைத்துக் கொள்ளாமல், மொழி பெயர்க்க வேண்டும் என்பது அவரது அறிவுரை.
அவரது விருப்பத்தின் படியே, உலகப் பொதுமறையாம் திருக்குறள், அதிக மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டு வருகிறது. ஆங்கிலத்தில் மட்டும், 100க்கும் மேற்பட்டோர் மொழி பெயர்த்துள்ளனர்.
கோவை மண்டல ஜி.எஸ்.டி., அலுவலகத்தில் துணை கமிஷனராக பணிபுரிந்து வரும் மணிமோகன், திருக்குறளை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்து, கவனம் ஈர்த்துள்ளார்.
கோவையை சேர்ந்த இவர், 'திருக்குறள் 108' என்ற தலைப்பில், காமத்து பால் இல்லாமல், அறத்துப்பால், பொருட்பால் ஆகிய இரண்டு பகுதிகளை மட்டும் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்துள்ளார்.
திருக்குறள் குறித்து பேசும் போது, மிகவும் உற்சாகமாகிறார். மொழிப் பெயர்ப்பு அனுபவம் குறித்து நம்மிடம் பகிர்ந்தார்...
ஒவ்வொரு வீட்டிலும் இருக்க வேண்டிய நுால் திருக்குறள். மனித வாழ்க்கையின் அனைத்து சாரத்தையும் உள்ளடக்கிய மெய்யான நுாலாக திருக்குறள் இருக்கிறது. நான் திருக்குறளை மொழிபெயர்க்க, எழுத்தாளர் சுஜாதா முக்கிய காரணம். சுஜாதா 'திருக்குறள் புதிய உரை' என்ற நுாலை எழுதி இருக்கிறார்.
அந்த நுாலின் முன்னுரையில், திருக்குறள் எளிமையான நடையில் மொழிபெயர்க்கப்படாததால் பெரும்பாலான வாசகர்களுக்கு போய் சேரவில்லை என்று குறிப்பிட்டு இருந்தார்.
அதன் துாண்டுதலால், எளிமையாக மொழிபெயர்த்தேன். இதில் குறளை மட்டும் மொழியாக்கம் செய்து இருக்கிறேன். இதற்கு விளக்க உரையும் தேவை என, வாசித்தவர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
அதனால், அடுத்த பதிப்பில் அதை சேர்த்து வெளியிடும் எண்ணம் உள்ளது. அடுத்து, சித்தர் பாடல்களை ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கும் முயற்சியில் இருக்கிறேன். உலக மொழிகள் அனைத்திலும் திருக்குறள் இருக்கும் நிலை உருவாகும்.
நான் திருக்குறளை மொழிபெயர்க்க, எழுத்தாளர் சுஜாதா முக்கிய காரணம். சுஜாதா 'திருக்குறள் புதிய உரை' என்ற நுாலை எழுதி இருக்கிறார். அந்த நுாலின் முன்னுரையில், திருக்குறள் எளிமையான நடையில் மொழிபெயர்க்கப்படாததால் பெரும்பாலான வாசகர்களுக்கு போய் சேரவில்லை என்று குறிப்பிட்டு இருந்தார்.
அதன் துாண்டுதலால், எளிமையாக மொழிபெயர்த்தேன்.
மேலும்
-
டில்லி வீரர்கள் அபாரம்; குஜராத்துக்கு 204 ரன்கள் இலக்கு
-
நக்சல்களின் 12 பதுங்கு குழிகள் அழிப்பு: சத்தீஸ்கரில் பாதுகாப்பு படை தீவிரம்
-
காசாவில் இஸ்ரேல் தொடர் தாக்குதல்; 48 மணி நேரத்தில் 90 பேர் பலி
-
பிரதமர் மோடியுடன் பேசியது கவுரவம்: எலான் மஸ்க் பெருமிதம்
-
விசைத்தறியாளர்கள் போராட்டம்: பா.ஜ., ஆதரவு
-
8 வயது சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை; 10ம் வகுப்பு மாணவன் கைது