கேரியரில் வருது வீட்டு சாப்பாடு மூன்று வேளையும் 'கமகமக்குது' பாரு!

இ ன்று, பெரும்பாலான குடும்பங்களில் கணவன், மனைவி பணிக்கு செல்லும் நிலை. சமையல் வேலைக்கு நேரம் ஒதுக்குவது பெரும் சவால். மறு பக்கம், முதியோர் சமைக்க முடியாத சூழலும் நிலவுகிறது.
ஒரு நாளுக்கு மட்டுமல்ல... ஒரு மாதத்துக்கு மூன்று வேளையும் உணவு தேவைப்படுகிறது என்றால், அதற்கு நாங்கள் இருக்கிறோம் என்று 'ஹலோ' சொல்கின்றனர், 'ஹோம் கிட்சன்' நிறுவனத்தார்.
கடந்தாண்டு, சபரீஷ் என்பவர் சிறியளவில் துவங்கிய, ஹோம் கிட்சனுக்கு கிடைத்த வரவேற்பால், கணபதி மற்றும் உக்கடம் பகுதிகளிலும் விரிவுபடுத்தப்பட்டுள்ளது.
சபரீஷிடம் ஒரு நேர்காணல்...
ஹோம் கிச்சன் என்றால்...?
வீட்டு சமையலை போல், சுவையும், ஆரோக்கியமும் நிறைந்திருக்கும். தினம் மூன்று வேளைக்கும் நேரத்துக்கு ஏற்ப நேரில் வாடிக்கையாளருக்கு கொண்டு சேர்ப்பது. உணவில் செயற்கை நிறங்கள் சேர்ப்பதில்லை. ஹோம் கிட்சனில், மூன்று வேலையும் மாதத்துக்கு சேர்த்து ரூ.5,000ம் மட்டுமே ஆகிறது. ஒரு நாளுக்கு ரூ.192 என்பது கணக்கு.
எங்கு கிடைக்கிறது?
கோவையில் துடியலுார், சரவணம்பட்டி, சுங்கம், டி.வி.எஸ்., நகர், கவுண்டம்பாளையம் பகுதிகளில் ஹோம் கிட்சன் சேவை உள்ளது. இப்பகுதிகளை மையமாக வைத்து, 10 கி.மீ., சுற்றளவில் உணவு வினியோகிக்கிறோம். காலை: 7:15 முதல் -9:00 மணி, மதியம் 12:15 முதல் 2:00 மணிக்குள், இரவு 7:00 மணி முதல் 8:00 மணிக்குள், வாடிக்கையாளர்களுக்கு உணவு சேர்த்து விடுவோம்.
மெனு ப்ளீஸ்?
காலை: இட்லி, பொங்கல், தோசை, கிச்சடி, ஊத்தப்பம்.மதியம்: சாம்பார் சாதம், வெரைட்டி ரைஸ், சைவ, அசைவ சாப்பாடு இரவு: சப்பாத்தி, பணியாரம், ஆலு பரோட்டா.
உப்பு, கார அளவை குறைக்கவும், அதிகரிக்கவும் வாடிக்கையாளர்கள் சொல்லலாம்.
அடுத்த திட்டம்?
மக்கள் தரப்பில் வரவேற்பு உள்ளதால், புதிய பகுதிகளில் விரைவில் சேவை துவங்க உள்ளோம்.
இவர்களை, 96000 44092 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.
மேலும்
-
டில்லி வீரர்கள் அபாரம்; குஜராத்துக்கு 204 ரன்கள் இலக்கு
-
நக்சல்களின் 12 பதுங்கு குழிகள் அழிப்பு: சத்தீஸ்கரில் பாதுகாப்பு படை தீவிரம்
-
காசாவில் இஸ்ரேல் தொடர் தாக்குதல்; 48 மணி நேரத்தில் 90 பேர் பலி
-
பிரதமர் மோடியுடன் பேசியது கவுரவம்: எலான் மஸ்க் பெருமிதம்
-
விசைத்தறியாளர்கள் போராட்டம்: பா.ஜ., ஆதரவு
-
8 வயது சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை; 10ம் வகுப்பு மாணவன் கைது