பெருமை கொள்கிறது சொக்கம்பாளையம் கிராமம்

அக்காலகட்டத்தில், உப்பு சத்தியாகிரகம், ஒத்துழையாமை இயக்கம் உட்பட இயக்கங்கள் முக்கியமானவை.
பல கட்ட பயணங்களுக்கு பின், 1934 பிப்., 6ம் தேதி, அன்னுார் அருகே, மூன்று கி.மீ., தொலைவில் உள்ள சொக்கம்பாளையம் கிராமத்துக்கு, மகாத்மா காந்தி வந்தார். சுதந்திர வேட்கை அதிகரித்த காலம் அது. கிராம மக்களிடையே உரையாற்றி, சுதந்திர போராட்டத்தில் பங்கேற்க, இங்குள்ளவர்களுக்கு அழைப்பு விடுத்தார்.
அதன்படி, கிராமத்தில் இருந்து சீனிவாசராவ், சோனா பாய், பெட்டையன், சின்னையன், மாசிலாமணி ஆகிய ஐந்து பேர், சுதந்திரப் போராட்டத்தில் பங்கேற்று, பல ஆண்டுகள் சிறை தண்டனை அனுபவித்தனர்.
பின், மத்திய, மாநில அரசுகளால் தியாகிகள் என கவுரவிக்கப்பட்டனர். காந்தியின் வருகையின் நினைவாக, 50 ஆண்டுகளுக்கு பின், சொக்கம்பாளையத்தில் காந்தி மியூசியம் ஏற்படுத்தப்பட்டது. இதில், காந்தி பங்கேற்ற போராட்டங்கள் உட்பட அனைத்து புகைப்படங்களும் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன. மியூசியத்தில் உள்ள, 100க்கும் மேற்பட்ட புகைப்படங்கள், பார்ப்பவர்களை அப்படியே சுதந்திர போராட்டத்துக்கு அழைத்து செல்கின்றன.
கிராமத்தில், மகாத்மா காந்திக்கு சிலை வைக்கப்பட்டு, அரசுப் பள்ளிக்கு அவரது பெயர் சூட்டப்பட்டுள்ளது. சுதந்திர போராட்ட தியாகிகளால், இந்த கிராமம் பெருமை கொள்கிறது.
மேலும்
-
டில்லி வீரர்கள் அபாரம்; குஜராத்துக்கு 204 ரன்கள் இலக்கு
-
நக்சல்களின் 12 பதுங்கு குழிகள் அழிப்பு: சத்தீஸ்கரில் பாதுகாப்பு படை தீவிரம்
-
காசாவில் இஸ்ரேல் தொடர் தாக்குதல்; 48 மணி நேரத்தில் 90 பேர் பலி
-
பிரதமர் மோடியுடன் பேசியது கவுரவம்: எலான் மஸ்க் பெருமிதம்
-
விசைத்தறியாளர்கள் போராட்டம்: பா.ஜ., ஆதரவு
-
8 வயது சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை; 10ம் வகுப்பு மாணவன் கைது