உள்ளாட்சி அமைப்புகளுக்கு இடைத்தேர்தல் : மின்னணு ஓட்டு இயந்திரங்கள் வந்தாச்சு

கோவை: கோவை மாவட்டத்தில் காலியாக உள்ள, 14 உள்ளாட்சி அமைப்பு பதவிகளுக்கான தேர்தல் வரும் மே மாதம் நடத்தப்படுவதை முன்னிட்டு, நேற்று மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் கோவைக்கு வந்தன.
தமிழகம் முழுக்க, உள்ளாட்சி அமைப்பில் காலியாக உள்ள இடங்களுக்கு வரும் மே மாதம் இடைத்தேர்தல் நடத்த, மாநில தேர்தல் கமிஷன் அறிவித்துள்ளது. கோவையில் உள்ள ஊரக, நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளில் காலியாக உள்ள 14 பதவிகளுக்கு மே மாதத்தில் இடைத்தேர்தல் நடத்த, மாநில தேர்தல் கமிஷன் திட்டமிட்டுள்ளது.
இது தொடர்பாக நேற்று முன் தினம், இடைத்தேர்தல் நடைபெறும் ஓட்டுச்சாவடி பட்டியலை மாவட்ட நிர்வாகம் வெளியிட்டது.
இதைத்தொடரந்து, தேர்தல் நடைபெறும் பூத் குறித்த அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ளன. இதற்கான வாக்காளர் பட்டியல், ஏப்.,23க்குள் வெளியீடு செய்யப்படும். ஓட்டுப்பதிவு மேற்கொள்வதற்காக கள்ளக்குறிச்சி, செங்கல்பட்டு, கிருஷ்ணகிரி மாவட்டங்களிலிருந்து, மின்னணு ஓட்டுப்பெட்டிகள் நேற்று கோவை வந்தன.
மின்னணு ஓட்டு இயந்திரங்களில், 200 கன்ட்ரோல் யூனிட்டுகளும், 220 பேலட் யூனிட்டுகளும் வந்துள்ளன. இவை 2011 மற்றும் 2012 மாடல்களாகும்.
இதை மாவட்ட வருவாய் அலுவலர் ஷர்மிளா, உள்ளிட்ட வருவாய்த்துறையினர் ஆய்வு செய்து கோவை அவிநாசி சாலையிலுள்ள, பழைய பாஸ்போர்ட் அலுவலக வளாகத்தில், ஸ்ட்ராங் ரூம் அமைத்து பாதுகாப்பாக வைத்துள்ளனர்.
கோவையில் தாளியூர் பேரூராட்சி 3 வது வார்டு, பொள்ளாச்சி நகராட்சி 7, 12, 21 ஆகிய மூன்று வார்டுகள், மேட்டுப்பாளையம் நகராட்சியில் 2 வது வார்டு, செட்டிபாளையம் பேரூராட்சியில் 4 மற்றும் 10 வது வார்டு, தென்கரை பேரூராட்சி 1வது வார்டு, நெ4 வீரபாண்டி பேரூராட்சியில் 13 வது வார்டு, நரசிம்மநாயக்கன்பாளையம் பேரூராட்சியில் 2 வது வார்டு, வேடபட்டி பேரூராட்சியில் 11 வது வார்டு, கோட்டூர் பேரூராட்சியில் 15வது வார்டு, கூடலுார் நகராட்சியில் 23 வது வார்டு ஆகிய 14 கவுன்சிலர் பதவிகளுக்கு, தேர்தல் நடத்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
மேலும்
-
டில்லி வீரர்கள் அபாரம்; குஜராத்துக்கு 204 ரன்கள் இலக்கு
-
நக்சல்களின் 12 பதுங்கு குழிகள் அழிப்பு: சத்தீஸ்கரில் பாதுகாப்பு படை தீவிரம்
-
காசாவில் இஸ்ரேல் தொடர் தாக்குதல்; 48 மணி நேரத்தில் 90 பேர் பலி
-
பிரதமர் மோடியுடன் பேசியது கவுரவம்: எலான் மஸ்க் பெருமிதம்
-
விசைத்தறியாளர்கள் போராட்டம்: பா.ஜ., ஆதரவு
-
8 வயது சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை; 10ம் வகுப்பு மாணவன் கைது