துப்பாக்கி சுடுதல் போட்டி 'டாப் 10' போலீசார் தேர்வு
கோவை: கோவை மாநகர போலீசாருக்கான துப்பாக்கி சுடுதல் போட்டியில், சிறந்த 10 வீரர்கள் இறுதிப்போட்டிக்குதேர்வு செய்யப்பட்டனர்.
கோவை மாநகர போலீஸ் பிரிவின் பவள விழா கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக, போலீசாருக்கான துப்பாக்கி சுடுதல் போட்டி, பி.ஆர்.எஸ்., வளாகத்தில் உள்ள ரைபிள் கிளப்பில்நடத்தப்பட்டது.
இதில், எஸ்.ஐ., முதல் கமிஷனர் வரை, 106 போலீஸ் அதிகாரிகள் பங்கேற்று 25மீ பிஸ்டல் சுடுதல் போட்டி நடத்தப்பட்டது.
இதில் கோவை மாநகர கமிஷனர், துணை கமிஷனர்கள், உதவி கமிஷனர்கள், இன்ஸ்பெக்டர், எஸ்.ஐ.,க்கள் என 106 அதிகாரிகள் பங்கேற்றனர்.
இப்போட்டியில் சிறப்பாக சுட்டு, அதிக மதிப்பெண்கள் பெற்ற ஆயுதப்படை துணை கமிஷனர் ராஜ் கண்ணா, மாநகர போலீஸ் கமிஷனர் சரவண சுந்தர், உதவி கமிஷனர்கள் வேல்முருகன், அஜய் தங்கம், சிந்து, இன்ஸ்பெக்டர்கள் சிவக்குமார், ரமேஷ் குமார், வெற்றிச்செல்வன், ராமச்சந்திரன் மற்றும் எஸ்.ஐ., சிவக்குமார் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர்.
தேர்வு செய்யப்பட்ட 10 பேருக்காக, இறுதிச்சுற்றுப்போட்டி இன்று நடக்கிறது.
மேலும்
-
டில்லி வீரர்கள் அபாரம்; குஜராத்துக்கு 204 ரன்கள் இலக்கு
-
நக்சல்களின் 12 பதுங்கு குழிகள் அழிப்பு: சத்தீஸ்கரில் பாதுகாப்பு படை தீவிரம்
-
காசாவில் இஸ்ரேல் தொடர் தாக்குதல்; 48 மணி நேரத்தில் 90 பேர் பலி
-
பிரதமர் மோடியுடன் பேசியது கவுரவம்: எலான் மஸ்க் பெருமிதம்
-
விசைத்தறியாளர்கள் போராட்டம்: பா.ஜ., ஆதரவு
-
8 வயது சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை; 10ம் வகுப்பு மாணவன் கைது