சத்துணவு ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

கோவை: குடும்ப பாதுகாப்பு மற்றும் ஓய்வூதியம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சத்துணவு ஊழியர்கள், கோவை கலெக்டர் அலுவலகம் முன்புஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மாவட்ட தலைவர் பானுலதா தலைமை வகித்தார்.

தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்க மாவட்ட செயலாளர் லதா கோரிக்கைகளை வலியுறுத்தி பேசுகையில், ''தமிழகத்தில்,63 ஆயிரத்துக்கு மேற்பட்ட சமையல் உதவியாளர்கள் மற்றும் அமைப்பாளர்கள் உள்ளிட்ட, காலிப்பணி இடங்களை உடனடியாக நிரப்பிட வேண்டும். காலை சிற்றுண்டித் திட்டத்தை, சத்துணவு ஊழியர்களை கொண்டு செயல்படுத்திட வேண்டும்.

சத்துணவு ஊழியர்களுக்கு காலமுறை ஊதியம் வழங்கி, குடும்ப பாதுகாப்புடன் கூடிய ஓய்வூதியம் வழங்கிட வேண்டும். சத்துணவு ஊழியர்கள் ஓய்வு பெறும் பொழுது, பணிக்கொடையாக ஐந்து லட்சம் ரூபாய் வழங்கிட வேண்டும்,'' என்றார்.

தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாவட்ட தலைவர் ஜெகநாதன், செயலாளர் செந்தில்குமார், ஓய்வூதியர் சங்க மாவட்ட செயலாளர்அருணகிரி உள்ளிட்டோர் உரையாற்றினர்.

Advertisement