வரும் 22ல் வக்கீல்கள் கோர்ட் புறக்கணிப்பு

கோவை: தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி வக்கீல் சங்க கூட்டுக்குழு சார்பில், வரும் 22ம் தேதி, நீதிமன்ற புறக்கணிப்பில் ஈடுபடுவது என, முடிவு செய்யப்பட்டுள்ளது.

கோவில் திருவிழா தொடர்பாக, பொதுமக்களுக்கு சாதகமாக பேசிய போளூர் வக்கீல் குமரன் என்பவரை, ஆதமங்கலம் போலீசார் கைது செய்துள்ளதாகவும், தேனியில் இரண்டு வக்கீல் மீது போலீசார் பொய் வழக்கு பதிவு செய்துள்ளதாகவும் கூறி, கண்டனம் தெரிவிக்கும் வகையில் கூட்டுக்குழு வேண்டுகோள் படி, கோவையில் வக்கீல்கள் நீதிமன்ற புறக்கணிப்பில் ஈடுபடுகின்றனர்.

Advertisement