திறமைகளால் பரிசை குவித்த மாணவர்கள்

கோவை: பச்சாபாளையம், ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லுாரியில், தொழில்நுட்பக் கலாசார விழா நடந்தது. எஸ்.என்.ஆர்., அறக்கட்டளையின் நிர்வாக அறங்காவலர் சுந்தர் தலைமை வகித்தார்.
நாடு முழுவதிலிருந்தும் பல்வேறு கல்லுாரிகளைச் சேர்ந்த சுமார், 500 க்கும் அதிகமான போட்டியாளர்கள் கலந்துகொண்டு, தங்களது திறமையை வெளிப்படுத்தினர்.
முன்னாள் கல்லுாரி மாணவர்கள் ரிசப் மற்றும் புவி அரசு ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாகக் கலந்துகொண்டு, போட்டிகளில் வெற்றி பெற்ற அணிகளுக்கு ரொக்கப் பரிசாக மொத்தம் ,ரூ. 4 லட்சம் வழங்கி வாழ்த்தினர்.
முக்கிய நிகழ்வான, 24 மணி நேர ஹேக்கத்தான் போட்டியில் வெற்றி பெற்ற கேரள மாநிலம், திருவனந்தபுரம் அரசு பொறியியல் கல்லுாரி அணிக்கு, ரொக்கப் பரிசாக ரூ. 50,000 வழங்கப்பட்டது. கல்லுாரி முதல்வர், துறை தலைவர்கள், பேராசிரியர்கள் விழாவில் கலந்துகொண்டனர்.
மேலும்
-
டில்லி வீரர்கள் அபாரம்; குஜராத்துக்கு 204 ரன்கள் இலக்கு
-
நக்சல்களின் 12 பதுங்கு குழிகள் அழிப்பு: சத்தீஸ்கரில் பாதுகாப்பு படை தீவிரம்
-
காசாவில் இஸ்ரேல் தொடர் தாக்குதல்; 48 மணி நேரத்தில் 90 பேர் பலி
-
பிரதமர் மோடியுடன் பேசியது கவுரவம்: எலான் மஸ்க் பெருமிதம்
-
விசைத்தறியாளர்கள் போராட்டம்: பா.ஜ., ஆதரவு
-
8 வயது சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை; 10ம் வகுப்பு மாணவன் கைது