உறுப்புதானம் செய்தவரால் 6 பேருக்கு மறுவாழ்வு

மதுரை: திண்டுக்கல் மாவட்டத்தில் விபத்தில் காயமடைந்து மூளைச்சாவு அடைந்த பெருமாள் 53, என்பவரின் உறுப்புகளை தானம் செய்ததால் ஆறு பேருக்கு வாழ்வு கிடைத்தது.

திண்டுக்கல் மாவட்டம் மார்க்கம்பட்டியைச் சேர்ந்த அவர், சிலநாட்களுக்கு முன் இரவு ஜவ்வாதுபட்டி என்ற இடத்தில் டூவீலரில் சென்றார். நிலைதடுமாறி விழுந்து மதுரை அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றார்.

நேற்று முன்தினம் மூளைச்சாவு அடைந்தார்.

அவரது உடல் உறுப்புகளை தானம் செய்ய மனைவி கருப்பாத்தாள் முன்வந்தார்.

அவரது கல்லீரல் மதுரை மீனாட்சி மிஷன் மருத்துவமனைக்கும், மதுரை அரசு மருத்துவமனை, திருச்சி காவேரி மருத்துவமனைக்கு தலா ஒரு சிறுநீரகம், 2 கருவிழிகள், தோல் போன்றவை மதுரை அரசு மருத்துவமனைக்கும் தானமாக வழங்கப்பட்டது.

இதன்மூலம் ஆறு பேர் மறுவாழ்வு பெற்றனர்.

Advertisement