திருஞான சம்பந்தர் வாழ்க்கை நாடகம் ஆரோவில்லில் சிறுவர்கள் அரங்கேற்றம்

வானூர்: ஆரோவிலில், திருஞான சம்பந்தரின் வாழ்க்கை குறித்த நாடகத்தை இசையம்பலம் பள்ளி மாணவர்கள் அரங்கேற்றினர்.
சர்வதேச நகரமான ஆரோவில் பாரத் நிவாசில், திருஞான சம்பந்தரின் வாழ்க்கை குறித்த இயல், இசை, நாடக நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதில், ஆரோவில் இசையம்பலம் பள்ளி மாணவர்கள் 100 பேர், திருஞான சம்பந்தரின் வாழ்க்கை நாடகத்தை அரங்கேற்றினர். பரதநாட்டியம், பழந்தமிழ், இசை மற்றும் யாழ் (பழங்கால வாத்தியம்) போன்றவற்றுடன் சம்பந்தரின் தேவாரப்பாடல்கள் தத்ரூபமாக மாணவர்கள் வழங்கினர்.
விழாவில், நாடகத்தை அரங்கேற்றிய மாணவர்களை பாராட்டிய ஆரோவில் அறக்கட்டளை செயலாளர் ஜெயந்தி ரவி, பேசுகையில்; நிகழ்ச்சியை மாணவர்கள் சிறப்பாக நிகழ்த்தி உள்ளனர். மிகவும் உணர்வு பூர்வமாக அமைந்துள்ளது. இந்த கலை நிகழ்ச்சியை இந்தியா முழுவதும் பகிர வேண்டும். முதலில் புதுச்சேரி அரசுக்கு முன்வைத்து, அதன் பிறகு பிற மாநிலங்களுக்கும் எடுத்துச் செல்வேன். இந்த நாடகத்தில் தமிழின் சக்தி, இசை, பக்தி மற்றும் நாயன்மார்களின் வரலாறு அடங்கியுள்ளது என்றார்.
நிகழ்ச்சியில், இசையம்பலம் பள்ளி முதல்வர் சஞ்சீவ் ரங்கநாதன் மற்றும் ஆரோவில் அறக்கட்டளை நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
மேலும்
-
டில்லி வீரர்கள் அபாரம்; குஜராத்துக்கு 204 ரன்கள் இலக்கு
-
நக்சல்களின் 12 பதுங்கு குழிகள் அழிப்பு: சத்தீஸ்கரில் பாதுகாப்பு படை தீவிரம்
-
காசாவில் இஸ்ரேல் தொடர் தாக்குதல்; 48 மணி நேரத்தில் 90 பேர் பலி
-
பிரதமர் மோடியுடன் பேசியது கவுரவம்: எலான் மஸ்க் பெருமிதம்
-
விசைத்தறியாளர்கள் போராட்டம்: பா.ஜ., ஆதரவு
-
8 வயது சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை; 10ம் வகுப்பு மாணவன் கைது