மேல்பாதி திரவுபதியம்மன் கோவிலில் சுவாமி தரிசனம் செய்யாத மக்கள்

விழுப்புரம்: மேல்பாதி திரவுபதியம்மன் கோவிலில் சுவாமி தரிசனம் செய்ய மக்கள் வராததால், தொடர்ந்து பதட்டம் நிலவி வருகிறது.
விழுப்புரம் அருகே மேல்பாதி தர்மராஜா திரவுபதியம்மன் கோவிலில், கடந்த 2023 மே மாதம் நடந்த தீமிதி திருவிழாவில் இரு சமூகத்தினரிடையே ஏற்பட்ட தகராறு காரணமாக, தடை உத்தரவு பிறப்பித்து கோவில் பூட்டி சீல் வைக்கப்பட்டது.
சென்னை உயர் நீதிமன்ற உத்தரவின்பேரில், கடந்த 2024 மார்ச் மாதம் கோவில் திறக்கப்பட்டு, தனி அர்ச்சகர் மூலம் ஒரு கால பூஜை மட்டும் நடந்தது.
தொடர்ந்து, 145 தடை உத்தரவை ரத்து செய்து, கோவிலை திறந்து, அனைத்து சமூகத்தினரும் வழிபாடு நடத்த மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுத்தது.
அதன்படி நேற்று முன்தினம் காலை கோவில் திறந்து பூஜைகள் முடிந்து, பக்தர்கள் அனுமதிக்கப்பட்டனர்.
வெள்ளிக்கிழமையான நேற்று இரண்டு கால பூஜை நடத்த ஏற்பாடு செய்யப்பட்டது. காலை 5:45 மணிக்கு, அர்ச்சகர் அய்யப்பன் முதற்கால பூஜை செய்தார்.
ஆனால், எதிர்ப்பு தெரிவித்த தரப்பினர் உட்பட பொதுமக்கள் யாரும் சுவாமி தரிசனம் செய்ய கோவிலுக்குள் செல்லவில்லை. இதனால், காலை 7:00 மணிக்கு கோவில் மூடப்பட்டது.
கோவில் திறந்தும் சுவாமி தரிசனத்திற்கு மக்கள் வராததால், கிராமத்தில் பதட்டம் நிலவுவதை தொடர்ந்துனா நுாற்றுக்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
மேலும்
-
டில்லி வீரர்கள் அபாரம்; குஜராத்துக்கு 204 ரன்கள் இலக்கு
-
நக்சல்களின் 12 பதுங்கு குழிகள் அழிப்பு: சத்தீஸ்கரில் பாதுகாப்பு படை தீவிரம்
-
காசாவில் இஸ்ரேல் தொடர் தாக்குதல்; 48 மணி நேரத்தில் 90 பேர் பலி
-
பிரதமர் மோடியுடன் பேசியது கவுரவம்: எலான் மஸ்க் பெருமிதம்
-
விசைத்தறியாளர்கள் போராட்டம்: பா.ஜ., ஆதரவு
-
8 வயது சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை; 10ம் வகுப்பு மாணவன் கைது