15ம் நுாற்றாண்டு செப்பு நாணயம் பண்ருட்டி அருகே கண்டெடுப்பு

பண்ருட்டி: பண்ருட்டி அடுத்த உளுந்தாம்பட்டு தென்பெண்ணையாற்றில் 15ம் நுாற்றாண்டு சேர்ந்த செப்பு நாணயம் கண்டெடுக்கப் பட்டன.

இதுகுறித்து தொல்லியல் ஆய்வாளர் இம்மானுவேல் கூறியதாவது:

பண்ருட்டி அடுத்த உளுந்தாம்பட்டு தென்பெண்ணையாற்றில் மேற்பரப்பு கள ஆய்வு மேற்கொண்டபோது, கரையில் இரண்டு செப்பு நாணயங்களை கண்டெடுத்தேன்.அதனை ஆய்வு செய்த தில் அவை விஜயநகர காலத்து நாணயம் என்பதும், 15ம் நுாற்றாண்டு சேர்ந்த 2ம் தேவராய மன்னரின் படைத்தளபதியும், கீழ் தெக்கலி ராஜ்யத்தின் ஆளுநராக இருந்த லக்ண தண்ட நாயக்கர் என்பவரின் நாணயம் என்பது தெரிய வந்தது.

இரண்டாம் தேவராயரின் அனுமதியுடன் தனது சொந்த பெயரில் நாணயங்களை அச்சிட்டுள்ளார். நாணயத்தின் முன் பக்கத்தில் யானை ஓடுவதுபோல் உள்ளது. யானையின் மேல் பகுதியில் கன்னட எழுத்தில் ல என்று உள்ளது. பின்பக்கத்தில் மூன்று வரிகள் கன்னட எழுத்தில் கன தனய காரு என்று உள்ளது என்றார்.

Advertisement