குளத்தில் மான் இறப்பு வனத்துறை விசாரணை

புதுச்சத்திரம்: புதுச்சத்திரம் அருகே குளத்தில் மான் இறந்து கிடந்தது குறித்து வனத்துறையினர் விசாரித்து வருகின்றனர்.

புதுச்சத்திரம் அடுத்த துள்ளாமேடு கிராமத்தில் உள்ள விழல் குளத்தில், நேற்று காலை 7:00 மணி அளவில், மூன்று வயது மதிக்க தக்க ஆண் புள்ளி மான் இறந்து கிடந்தது.

தகவலறிந்த கடலூர் வனத்துறை வனவர் திலக்ராஜ், இறந்த மானை பார்வையிட்டார். மேட்டுப்பாளையம் கால்நடை உதவி மருத்துவர் நரேந்திரன் தலைமையிலான மருத்துவ குழுவினர், புள்ளி மானை பிரேத பரிசோதனை செய்தனர். பின்னர், மானை, சித்திரைப்பேட்டையில் புதைத் தனர். மானின் இறப்பிற்கான காரணம் குறித்து வனத்துறை அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர்.

Advertisement