348 கிலோ குட்கா பறிமுதல் வடலுாரில் 5 பேர் கைது

வடலுார்: பெங்களூருவில் இருந்து வடலுாருக்கு காரில் 348 கிலோ குட்கா கடத்தி வந்த 5 பேரை போலீசார் கைது செய்தனர்.
பெங்களூருவில் இருந்து வடலுாருக்கு காரில் குட்கா உள்ளிட்ட தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை காரில் கடத்தி வருவதாக கடலுார் மாவட்ட போலீசாருக்கு ரகசிய தகவல் வந்தது.
அதனைத் தொடர்ந்து எஸ்.பி., ஜெயக்குமார் உத்தரவின் பேரில் தனிப்படை எஸ்.ஐ.,க்கள் ராஜா, தவசெல்வம் தலைமையிலான போலீசார் நேற்று வடலூர், ஆபத்தாரணபுரம் பகுதியில் வாகன தணிக்கை மேற்கொண்டனர்.
அப்போது, அவ்வழியே வந்த டிஎன் 49 - பிஇ-6946 பதிவெண் கொண்ட ஹுண்டாய்-கிரீட்டா காரை நிறுத்தி சோதனை செய்ததில், 29 மூட்டைகளில், 348 கிலோ குட்கா பொருட்கள் கடத்தி செல்வது தெரிய வந்தது. அதனை பறிமுதல் செய்த தனிப்படை போலீசார், குட்கா பொருட்களை கடத்தி வந்த ராஜஸ்தான் மாநிலம், ஜாலார் பாக்ராவை சேர்ந்த தன்ராஜ் பரியால், 26; திலீப் சிங், 20; நெய்வேலி, மந்தாரக்குப்பம், அண்ணா நகர் கணேசன்,56; வடலுார், ஜி.பி. நகர் ராம்குமார்,37; வடலுார் ஆபத்தாரணபுரம் வேல்முருகன், 59, ஆகியோரை பிடித்து வடலுார் போலீசில் ஒப்படைத்தனர்.
அதன்பேரில், வடலுார் போலீசார் வழக்கு பதிந்து 5 பேரையும் கைது செய்து, கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
மேலும்
-
டில்லி வீரர்கள் அபாரம்; குஜராத்துக்கு 204 ரன்கள் இலக்கு
-
நக்சல்களின் 12 பதுங்கு குழிகள் அழிப்பு: சத்தீஸ்கரில் பாதுகாப்பு படை தீவிரம்
-
காசாவில் இஸ்ரேல் தொடர் தாக்குதல்; 48 மணி நேரத்தில் 90 பேர் பலி
-
பிரதமர் மோடியுடன் பேசியது கவுரவம்: எலான் மஸ்க் பெருமிதம்
-
விசைத்தறியாளர்கள் போராட்டம்: பா.ஜ., ஆதரவு
-
8 வயது சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை; 10ம் வகுப்பு மாணவன் கைது