மரக்காணம் சாராய வழக்கு வாலிபர் குட்கா கடத்தல் வழக்கில் கைது

திருவெண்ணெய்நல்லுார்: திருவெண்ணெய்நல்லுாரில் ரூ. 6 லட்சம் மதிப்புள்ள 280 கிலோ குட்கா கடத்திய வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
திருவெண்ணெய்நல்லூர் இன்ஸ்பெக்டர் மைக்கேல் இருதயராஜ் மற்றம் போலீசார் நேற்று மாலை ஆனத்துாரில் வாகன சோதனை நடத்தினர்.
அப்போது பைக்கில் மூட்டையுடன் வந்த வாலிபரை நிறுத்தி சோதனை செய்தனர். மூட்டையில் குட்கா இருப்பது தெரியவந்தது.
விசாரணையில், பைக்கில் வந்தவர் மரக்காணம் கரிபாளையத்தை சேர்ந்த முருகன் மகன் மதன்குமார், 30; திருவெண்ணெய்நல்லூர் அருகே உள்ள டி.குமாரமங்கலத்தில் வாடகை வீட்டில் தங்கி, குட்கா பொருட்களை பல பகுதிகளுக்கு சப்ளை செய்து வருவதும், வீட்டில் 280 கிலோ குட்கா பாக்கெட்டுகள் மறைத்து வைத்திருப்பது தெரியவந்தது.
அதன்பேரில் போலீசார் விரைந்து சென்று, மதன்குமார் வீட்டில் பதுக்கி வைத்திருந்த குட்கா மூட்டைகள், 7 மொபைல்போன்கள், கடத்தலுக்கு பயன்படுத்திய ஸ்கூட்டர், ரூ. 70 ஆயிரம் பணத்தை பறிமுதல் செய்தனர். பறிமுதல் செய்த பொருட்களின் மதிப்பு ரூ. 6 லட்சம்.
கைது செய்யப்பட்ட மதன்குமார் மரக்காணம் எரிசாராய வழக்கில் தொடர்புடையவர் என்பதும், ஏற்கனவே இவர் மீது 3 சாராய வழக்குகள் நிலுவையில் உள்ளது குறிப்பிடதக்கது.

மேலும்
-
டில்லி வீரர்கள் அபாரம்; குஜராத்துக்கு 204 ரன்கள் இலக்கு
-
நக்சல்களின் 12 பதுங்கு குழிகள் அழிப்பு: சத்தீஸ்கரில் பாதுகாப்பு படை தீவிரம்
-
காசாவில் இஸ்ரேல் தொடர் தாக்குதல்; 48 மணி நேரத்தில் 90 பேர் பலி
-
பிரதமர் மோடியுடன் பேசியது கவுரவம்: எலான் மஸ்க் பெருமிதம்
-
விசைத்தறியாளர்கள் போராட்டம்: பா.ஜ., ஆதரவு
-
8 வயது சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை; 10ம் வகுப்பு மாணவன் கைது