துணை முதல்வருடன் அனில் கும்ப்ளே சந்திப்பு

பெங்களூரு: துணை முதல்வர் சிவகுமாரை, முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் அனில் கும்ப்ளே நேற்று சந்தித்துப் பேசினார்.
பெங்களூரு சதாசிவநகரில் உள்ள துணை முதல்வர் சிவகுமார் வீட்டிற்கு, முன்னாள் இந்திய கிரிக்கெட் அணி முன்னாள் கேப்டன் அனில் கும்ப்ளே நேற்று காலை வந்தார். இருவரும் அரைமணி நேரம் பேசினர்.
வெளியே வந்ததும் அனில் கும்ப்ளே அளித்த பேட்டி:
ஐ.பி.எல்., கிரிக்கெட் போட்டிகள் 18 ஆண்டுகளாக நடக்கிறது. இம்முறை ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி கோப்பையை வெல்லும் என்று எதிர்பார்ப்பு உள்ளது.
'இ சாலா கப் நம்தே' என்று யாரும் சொல்ல வேண்டாம். அப்படி சொல்லும்போதுஎல்லாம் நமக்கு தொந்தரவு ஆகிறது. பஞ்சாப் அணியுடனான போட்டி யில் பெங்களூரு அணி வெல்ல என் வாழ்த்துகள்.
நான் பெங்களூரு, பஞ்சாப் அணிக்காக விளையாடி உள்ளேன். தனிப்பட்ட விஷயத்திற்காக துணை முதல்வர் சிவகுமாரை சந்தித்துப் பேசினேன்.
இவ்வாறு அவர்கூறினார்.
அனில் கும்ப்ளே தன்னை சந்தித்த புகைப்படத்தை 'எக்ஸ்' தளத்தில் பதிவிட்டு உள்ள சிவகுமார்,'இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும், புகழ்பெற்ற சுழற்பந்து வீச்சாளரான அனில் கும்ப்ளேவை சந்தித்தது மகிழ்ச்சி.
கர்நாடகாவுக்கும்,இந்திய கிரிக்கெட்டிற்கும் பெருமை சேர்த்த அவருடன் உரையாடுவதில், எப்போதும் மகிழ்ச்சி அடைகிறேன்' என்று கூறி உள்ளார்.
மேலும்
-
டில்லி வீரர்கள் அபாரம்; குஜராத்துக்கு 204 ரன்கள் இலக்கு
-
நக்சல்களின் 12 பதுங்கு குழிகள் அழிப்பு: சத்தீஸ்கரில் பாதுகாப்பு படை தீவிரம்
-
காசாவில் இஸ்ரேல் தொடர் தாக்குதல்; 48 மணி நேரத்தில் 90 பேர் பலி
-
பிரதமர் மோடியுடன் பேசியது கவுரவம்: எலான் மஸ்க் பெருமிதம்
-
விசைத்தறியாளர்கள் போராட்டம்: பா.ஜ., ஆதரவு
-
8 வயது சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை; 10ம் வகுப்பு மாணவன் கைது