பெண் முன் அநாகரிகம் தலைமறைவு வாலிபர் கைது

சிவாஜிநகர்: பெண் முன்னிலையில் அநாகரிகமாக நடந்து கொண்டதுடன், தட்டிக் கேட்டவர்களை தாக்கிவிட்டு தலைமறைவான வாலிபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
பெங்களூரு சிவாஜிநகர் ராஜிவ் காந்தி காலனியை சேர்ந்தவர் வெங்கடேஷ். இவரது மகன் கார்த்திக், 24.
இவர் கடந்த 13ம் தேதி இரவு பக்கத்து வீட்டில் வசிக்கும் பெண் முன், தன் அந்தரங்க உறுப்பை காட்டி, அநாகரிகமாக நடந்து கொண்டார்.
அதிர்ச்சி அடைந்த பெண், கணவரிடம் கூறினார். கார்த்திக்கை, பெண்ணின் கணவரும், அவரது குடும்பத்தினரும் தட்டிக் கேட்டனர்.
அப்போது ஏற்பட்ட தகராறில் வெங்கடேஷ், கார்த்திக் இருவரும் சேர்ந்து, பெண்ணின் கணவர், குடும்பத்தின் 6 பேரை செங்கல், பூந்தொட்டியால் தாக்கிவிட்டு தலைமறைவாகினர். இதுகுறித்து பெண்ணின் கணவர் அளித்த புகாரில், சிவாஜிநகர் போலீசார் வெங்கடேஷ், கார்த்திக்மீது வழக்குப்பதிவுசெய்தனர்.
தலைமறைவாக இருந்த கார்த்திக், நேற்று முன்தினம் இரவு கைது செய்யப்பட்டார். 'இயற்கை உபாதை கழிக்கவே சென்றேன்.
பெண் நின்றதை நான் கவனிக்கவில்லை. அவர் தவறாக புரிந்து கொண்டு பிரச்னை செய்தார்' என, போலீசாரிடம் கார்த்திக் கூறி இருப்பதாக தகவல் வெளியாகிஉள்ளது.
மேலும்
-
டில்லி வீரர்கள் அபாரம்; குஜராத்துக்கு 204 ரன்கள் இலக்கு
-
நக்சல்களின் 12 பதுங்கு குழிகள் அழிப்பு: சத்தீஸ்கரில் பாதுகாப்பு படை தீவிரம்
-
காசாவில் இஸ்ரேல் தொடர் தாக்குதல்; 48 மணி நேரத்தில் 90 பேர் பலி
-
பிரதமர் மோடியுடன் பேசியது கவுரவம்: எலான் மஸ்க் பெருமிதம்
-
விசைத்தறியாளர்கள் போராட்டம்: பா.ஜ., ஆதரவு
-
8 வயது சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை; 10ம் வகுப்பு மாணவன் கைது