சித்து அரசை கவிழ்க்க கார்கே முயற்சி: ஸ்ரீராமுலு மரத்தில் வாகனம் மோதி 4 பேர் பலி

கலபுரகி: ''காங்., தேசிய தலைவர்மல்லிகார்ஜுன் கார்கேவே, முதல்வர் சித்தராமையாவின் அரசை கவிழ்ப்பார்,'' என, பா.ஜ., முன்னாள் அமைச்சர் ஸ்ரீராமுலு 'குண்டு' போட்டுள்ளார்.

கலபுரகியில் நேற்று அவர் அளித்த பேட்டி:

முதல்வர் சித்தராமையா, துணை முதல்வர் சிவகுமார் இடையே, முதல்வர் பதவியில் 'இழுபறி போர்' நடக்கிறது. இதற்கிடையில் மூன்றாம் நபர் போட்டியில் நுழைந்துள்ளார். இருவரின் சண்டை, மூன்றாம் நபருக்கு லாபமாக இருக்கும்.

மல்லி கார்ஜுன கார்கே, தன் மகன் பிரியங்க் கார்கேவை முதல்வராக்க, சித்தராமையா அரசை கவிழ்க்க முயற்சிக்கிறார். இதுகுறித்து, தனக்கு நெருக்கமானவர்களுடன் பேசியுள்ளார்.

காங்., அரசை கவிழ்க்க பிரதமர் மோடி முயற்சிப்பதாக கார்கே, குற்றஞ்சாட்டியுள்ளார். ஆனால் இவர் தான், தன் கட்சி அரசை கவிழ்க்க முயற்சிக்கிறார்.

தந்தையும், பிள்ளைகளும் கலபுரகியை, 'பி பப்ளிக் ஆப் கலபுரகி'யாக்கியுள்ளனர். எங்கள் கட்சியின் மாநில தலைவர், கலபுரகிக்கு வந்தால், காங்கிரஸ் தொண்டர்கள் தொந்தரவு கொடுக்கின்றனர். இவர்களுக்கு நாங்கள் தக்க பதிலடி கொடுப்போம்.

இவ்வாறு அவர்கூறினார்.

Advertisement