பெண் வக்கீல் தற்கொலை ஏன்? சி.ஐ.டி., அறிக்கையில் தகவல்

பெங்களூரு: 'விசாரணையால் ஏற்பட்ட மன அழுத்தம் காரணமாகவே வக்கீல் ஜீவா தற்கொலை செய்துள்ளார்' என, சி.ஐ.டி., அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
பா.ஜ., ஆட்சியின்போது, 'போவி' மேம்பாட்டு ஆணையத்தில் நடந்ததாக கூறப்படும் முறைகேடு தொடர்பாக சி.ஐ.டி., விசாரணை நடந்து வருகிறது. இதில் பெண் வக்கீலும், தொழில் முனைவருமான ஜீவா விசாரிக்கப்பட்டார்.
கடந்த நவ., 22ம் தேதி துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். அப்போது, விசாரணை அதிகாரியான டி.ஜி.பி., கனகலட்சுமி தன்னை நிர்வாணமாக்கி விசாரித்ததாகவும், வழக்கில் இருந்து விடுவிக்க லஞ்சமாக 25 லட்சம் ரூபாய் கேட்டதாகவும் கடிதம் எழுதி வைத்திருந்தார்.
இதையடுத்து, சஸ்பெண்டில் உள்ள டி.ஜி.பி., கனகலட்சுமி மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. கடந்த 11ம் தேதி அவர் கைது செய்யப்பட்டார்.
கடந்த 12ம் தேதி சி.ஐ.டி., தரப்பில், கர்நாடக உயர் நீதிமன்றத்தில் 2,300 பக்கங்கள் கொண்ட விசாரணை அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டது. இந்த அறிக்கை குறித்த பல அதிர்ச்சி தகவல்கள் வெளியாகி உள்ளன.
ஜீவாவின் இறப்பு குறித்து தடயவியல் உளவியல் பரிசோதனை, நிமான்ஸ் மருத்துவர் ராஜ்குமாரி தலைமையிலான குழுவினரால் நடத்தப்பட்டுள்ளது.
தற்கொலைக்கான காரணத்தை கண்டுபிடிப்பதற்காக, மாநிலத்தில் முதன் முறையாக நடந்துள்ளது.
இச்சோதனையில், ஜீவாவின் மனநிலை, மனச்சோர்வு, துன்புறுத்தலின் தாக்கம் ஆகியவை குறித்து விசாரிக்கப்பட்டுள்ளது. இதில், கனகலட்சுமி விசாரிக்கும் வீடியோக்களில் ஜீவாவின் முகபாவனைகள், செயல்கள் குறித்தும் விசாரணை நடந்துள்ளது.
ஜீவா தற்கொலை செய்வதற்கு முன்னால் நடந்து கொண்ட விதம் குறித்து அவரது நண்பர்கள், அக்கம் பக்கத்தினர், வாடகை வீட்டின் உரிமையாளர் என விசாரித்ததில் மன அழுத்தத்தில் இருந்ததாக கூறி உள்ளனர்.
இதன் வாயிலாக விசாரணையால் ஏற்பட்ட மன அழுத்தம் காரணமாகவே வக்கீல் ஜீவா தற்கொலை செய்து கொண்டுள்ளார் என்பதை, நிமான்ஸ் டாக்டர்கள் குழுவினர் உறுதிபடுத்தி உள்ளனர்.
மேலும்
-
டில்லி வீரர்கள் அபாரம்; குஜராத்துக்கு 204 ரன்கள் இலக்கு
-
நக்சல்களின் 12 பதுங்கு குழிகள் அழிப்பு: சத்தீஸ்கரில் பாதுகாப்பு படை தீவிரம்
-
காசாவில் இஸ்ரேல் தொடர் தாக்குதல்; 48 மணி நேரத்தில் 90 பேர் பலி
-
பிரதமர் மோடியுடன் பேசியது கவுரவம்: எலான் மஸ்க் பெருமிதம்
-
விசைத்தறியாளர்கள் போராட்டம்: பா.ஜ., ஆதரவு
-
8 வயது சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை; 10ம் வகுப்பு மாணவன் கைது