கிரைம் கார்னர்

பிரபலமான பிராண்டுகளின் பெயரில் போலியான ஆடைகள் உற்பத்தி செய்வதாக மாதநாயக்கனஹள்ளி போலீசாருக்கு புகார் வந்தது. குட்டதஹள்ளி கிராமத்தில் ஆடை தொழிற்சாலையில் போலீசார் நேற்று சோதனை நடத்தினர். போலி ஆடைகளை தயாரித்து வந்த அஸ்ரப், ஷர்புதீன், சரவணா ஆகியோரை போலீசார் கைது செய்தனர். 40 லட்சம் மதிப்புள்ள ஆடைகள் பறிமுதல் செய்யப்பட்டன.

பெங்களூரை சேர்ந்தவர் சந்தோஷ் குமார். இவர், கடந்த வாரம் காரில் சென்றபோது, சைரன் வைத்த காரில் வந்த ஒருவர், தன்னை போலீஸ் என கூறிக்கொண்டு தாக்கினார். இதுகுறித்து சந்தோஷ், புலிகேசி நகர் போலீசில் புகார் செய்தார். புகாரின்பேரில், புலிகேசி நகரை சேர்ந்த டாக்சி டிரைவர் நிதுல் ராஜை போலீசார் நேற்று கைது செய்தனர். விசாரணையில், குடியரசு தின பேரணியில் கலந்து கொண்டபோது, சைரன் கிடைத்ததாக தெரிவித்துள்ளார்.

ராய்ச்சூர் தாலுகாவில் யாரகேரா போலீஸ் நிலைய பகுதியில் நேற்று மாலை இடியுடன் கூடிய கனமழை பெய்தது. மின்னல் தாக்கியதில், உடமகல் கிராமத்தை சேர்ந்த மல்லம்மா, 50, மார்சேத்தலா கிராமத்தை சேர்ந்த ஹனுமந்த யாதவ், 45, ஆகியோர் உயிரிழந்தனர்.

மாண்டியா மாவட்டம், நாகமங்களா தாலுகாவின், கெம்பாரே கிராமத்தை சேர்ந்தவர் மகேஷ். இவரது மனைவி கீதா. சொந்தமாக சரக்கு ஆட்டோ வைத்துள்ளனர். குழந்தைகளுக்கான பிளாஸ்டிக் விளையாட்டுப் பொருட்களை, கிராமம், கிராமமாக கொண்டு சென்று விற்று, வாழ்க்கை நடத்தினர். நேற்று முன் தினம் இரவு ஆட்டோவை வீட்டு முன் நிறுத்தி இருந்தனர். நேற்று காலையில் தம்பதி பார்த்தபோது, ஆட்டோவும், அதில் இருந்த விளையாட்டு பொருட்களும் எரிந்து கிடப்பது தெரிந்தது. இதனால் அவர்களுக்கு 7 லட்சம் ரூபாய்க்கும் அதிகமான நஷ்டம் ஏற்பட்டுள்ளது.

சரக்கு ஆட்டோவுக்கு தீ

Advertisement