ஆரோக்கியமான அவல் பிசிபேலாபாத்

காலையில் எழுந்து, சிற்றுண்டி தயார் செய்வதை விட, என்ன சிற்றுண்டியை தயாரிப்பது என்பதே பெண்களுக்கு பெரும் பிரச்னை. இட்லி, தோசை, பூரி, பொங்கல் என, பல வகையான சிற்றுண்டிகள் இருந்தாலும், ஏதாவது புதிதாக தயாரிக்க வேண்டும் என, பெண்கள் விரும்புவர்.
பொதுவாக அரிசியில் பிசிபேலா பாத் தயாரிப்பது வழக்கம். அவல் பயன்படுத்தியும், வித்தியாசமான, ஆரோக்கியமான அவல் பிசிபேலா பாத் தயாரிக்கலாம். மிகவும் சுவையாக இருக்கும்.
செய்முறை
புளியை அரை கப் நீரில் போட்டு ஊற வையுங்கள். நன்கு ஊறிய பின், சாறு மட்டும் எடுத்துக் கொள்ளுங்கள். குக்கரில் துவரம் பருப்பை போட்டு, மூன்று விசில் வரும் வரை வேக வையுங்கள்.
பட்டாணியை நான்கு மணி நேரம், நீரில் ஊற வைக்க வேண்டும். கேரட், பீன்சை நன்றாக கழுவி சிறிதாக நறுக்கவும். பட்டாணி, கேரட், பீன்சை வேக வையுங்கள். இதில் புளி சாறு, வெல்லத்தை சேருங்கள். சிறிது நேரம் வைத்திருங்கள்.
அதன்பின் இந்த கலவையில், வேகவைத்த துவரம் பருப்பு, பிசிபேலாபாத் பொடியை சேர்த்து, நன்றாக கிளறுங்கள். அவலை நீரில் கழுவி, 10 நிமிடங்கள் ஊற வையுங்கள். இதை நீரில் இருந்து பிழிந்து, ஏற்கனவே தயார் செய்து வைத்துள்ள காய்கறி கலவையில் போடுங்கள்.
தேவையான அளவு உப்பு, சிறிதளவு தண்ணீர் சேர்த்து, 5 நிமிடம் வேக வைத்தால், சுவையான அவல் பிசிபேலாபாத் ரெடி.
விருப்பம் இருந்தால், ஒரு கைப்பிடி முந்திரி பருப்பை, நெய்யில் வறுத்து அவல் பிசிபேலாபாதில் சேர்க்கலாம். இதற்கு காரா பூந்தி, உருளைக்கிழங்கு சிப்ஸ் பொருத்தமான சைட் டிஷ்ஷாக இருக்கும்.
- நமது நிருபர் -
மேலும்
-
டில்லி வீரர்கள் அபாரம்; குஜராத்துக்கு 204 ரன்கள் இலக்கு
-
நக்சல்களின் 12 பதுங்கு குழிகள் அழிப்பு: சத்தீஸ்கரில் பாதுகாப்பு படை தீவிரம்
-
காசாவில் இஸ்ரேல் தொடர் தாக்குதல்; 48 மணி நேரத்தில் 90 பேர் பலி
-
பிரதமர் மோடியுடன் பேசியது கவுரவம்: எலான் மஸ்க் பெருமிதம்
-
விசைத்தறியாளர்கள் போராட்டம்: பா.ஜ., ஆதரவு
-
8 வயது சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை; 10ம் வகுப்பு மாணவன் கைது