ஜவ்வரிசி சாக்லேட் பாயசம்

எந்த நல்ல காரியம் செய்தாலும், 'ஸ்வீட் எடு கொண்டாடு' என்ற வசனத்தை சொல்லி, இனிப்புகளை எடுத்து கொள்வது வழக்கம். குறிப்பாக ஹிந்துக்கள் வீட்டில் கொண்டாடப்படும் பண்டிகையில், சுவாமிக்கு முன்பு பாயசம், சர்க்கரை பொங்கல் படையலிடுவது பல தலைமுறை பழக்கமாக உள்ளது. பாயசத்தில் பருப்பு, பால், அவல் என பல வகை உண்டு. சாக்லேட் - ஜவ்வரிசி காம்பினேஷனில் சூப்பர் பாயசம் செய்யலாம்.

தேவைப்படும் பொருட்கள்



* ஒரு கப் ஜவ்வரிசி

* இரண்டு ஸ்பூன் கோக்கோ பவுடர்

* கெட்டியான பால், சர்க்கரை ஒரு கப்

செய்முறை



ஜவ்வரிசியை நன்கு தண்ணீரில் அலசி சுத்தம் செய்ய வேண்டும். பின், தேவையான அளவிற்கு ஒரு பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி அதில் ஜவ்வரிசியை போட்டு அரை மணி நேரம் நன்கு ஊற வைக்க வேண்டும்.

நன்கு ஊறியதும், அடுப்பை ஆன் செய்து அதில் வாணலியை வைத்து ஜவ்வரிசி போட்டு ஒரு கப் அளவு தண்ணீர் ஊற்றி முக்கால் பதம் வெந்து வரும் அளவிற்கு கொதிக்க விட வேண்டும்.

ஜவ்வரிசி வெந்ததும் அதனுடன் கெட்டியான பால் சேர்த்து, கோக்கோ பவுடர் சேர்க்க வேண்டும். கோக்கோ பவுடர் இல்லாதவர்கள், டைரி மில்க் சாக்லேட்டை பாய்லிங் முறையில் கரைத்து பயன்படுத்தலாம். கரண்டியை வைத்து கிளறிக் கொண்டே இருக்க வேண்டும்.

ஜவ்வரிசி முழுதும் நன்கு வெந்து திக்கான பதத்திற்கு வந்த பின் ஒரு கப் சர்க்கரை சேர்க்க வேண்டும். இப்போது அடுப்பை ஆப் செய்து, அரை மணி நேரம் ஆற வைக்க வேண்டும். ஆறி முடிந்ததும் பிரிஜ்ஜில் கொண்டு வைத்து அரை மணி நேரம் கழித்து எடுத்து சாப்பிட்டால் குளுகுளு சாக்லேட் பாயசம் தயார்.


குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை விரும்பி சாப்பிடுவர்

- நமது நிருபர் -.

Advertisement