15 நிமிடத்தில் 'மதுரை பன் அல்வா'

பல விதமான உணவுகளுக்கு பெயர் பெற்றதில் முதலிடம் மதுரைக்கு உண்டு. மல்லிப்பூ இட்லி, ஜிகர்தண்டா என பல உணவு வகைகள் பேமஸ். இந்த வாரம் இவ்வூரின் 'பன் அல்வா' எப்படி செய்வது என்பதை பார்ப்போம்.

செய்முறை



 முதலில் பன்னை உதிரியாக்கிக் கொள்ள வேண்டும்.

 ஒரு கடாயில் நெய் ஊற்றி சூடானதும் உதிர்ந்து வைத்துள்ள பன்னை அதில் போட்டு, பொன்னிறமாகும் வரை வறுக்கவும். 'ரஸ்க்' போன்று மொறு மொறு என்ற பதத்தில் வந்ததும், வேறு பாத்திரத்தில் போடவும்.

 பின், அதே கடாயில் சிறிதளவு நெய் ஊற்றி முந்திரியை வறுத்துக் கொள்ளவும்.

 கனமான பாத்திரத்தில் சிறிதளவு நெய் ஊற்றி வறுத்து வைத்துள்ள பன்னை சேர்க்க வேண்டும். இதனுடன் சிறிது தண்ணீர், அரை கப் பால் சேர்த்து நன்றாக கிளறவும்.

 கொஞ்சம் கெட்டியான பதத்திற்கு வந்ததும், கருப்புக்கட்டியை காய்ச்சி வடிகட்டி, பன் கலவையில் ஊற்றி நன்றாக கிளற வேண்டும். அதனுடன் வறுத்து வைத்துள்ள முந்திரியையும் சேர்க்கவும்.

 15 நிமிடங்களுக்கு நன்றாக கிளறிக் கொண்டே இருங்கள். அடுப்பை மிதமான சூட்டில் வைத்து நெய்யை முழுவதுமாக சேர்க்காமல் கொஞ்சம் கொஞ்சமாக சேர்த்துக் கிளறவும்.


 நெய் பிரிந்து, பாத்திரத்தில் ஒட்டாத அளவிற்கு வந்ததும், அடுப்பை அணைத்துவிட்டால் போதும். சுவையான மதுரை ஸ்பெஷல் பன் அல்வா ரெடி

- நமது நிருபர் -.

Advertisement