அறுசுவை கட்டுரை..

பொதுவாக மாலை நேரத்தில், காபி, டீயுடன் நொறுக்கு தீனி தின்பது பலரின் வழக்கம். வீட்டில் உள்ள பெண்கள், முறுக்கு, தட்டை, லட்டு என, பல விதமான தின்பண்டங்களை தயாரித்து வைத்திருப்பர். கடைகளில் இருந்து வாங்குவோரும் உண்டு. தினமும் ஒரே விதமான நொறுக்கு தீனி தின்று போரடிக்கிறதா? மாறுதலுக்கு 'அவல் முறுக்கு' செய்து பாருங்கள்.

தேவையான பொருட்கள்



 அவல் - 2 கப்

 பச்சை மிளகாய் - 4

 சீரகம் - 1 ஸ்பூன்

 இஞ்சி - சிறிய துண்டு

 எண்ணெய் - பொறிக்க தேவையான அளவு

 உப்பு - சுவைக்கு தேவையான அளவு

செய்முறை



முதலில் அவலை நன்றாக கழுவி, ஒரு பாத்திரத்தில் போடுங்கள். நான்கு கப் தண்ணீர் ஊற்றி நனைத்து வையுங்கள். அதன்பின் அவலில் உள்ள தண்ணீரை வடித்துவிட்டு, இஞ்சி, உப்பு, சீரகம், பச்சை மிளகாய் போட்டு மிக்சியில் அரைக்கவும்.


வெயிலில் வெள்ளை துணியை விரித்து, அரைத்து வைத்துள்ள மாவை, முறுக்கு அச்சில் போட்டு பிழியவும். நன்றாக உலர்ந்த பின், மறுநாள் வாணலியை அடுப்பில் வைத்து, எண்ணெய் ஊற்றவும். காய்ந்ததும் முறுக்கை போட்டு பொன்னிறமாக பொறித்து எடுத்தால். சூப்பரான மொறு மொறு அவல் முறுக்கு தயார். மாறுபட்ட சுவையுடன் இருக்கும்

- நமது நிருபர் -.

Advertisement