அறுசுவை அறிவிப்பு கட்டுரை

சிறார்களுக்கு ஹார்லிக்ஸ் என்றால் மிகவும் பிடிக்கும். விரும்பி அருந்துவர். இது உடல் ஆரோக்கியமானது. ஹார்லிக்சை பாலில் கலந்து குடிப்பதுடன், சுவையான இனிப்பும் செய்து ருசிக்கலாம்.

செய்முறை



முதலில் வாணலியை அடுப்பில் வைத்து, அரை கப் நெய் ஊற்றி கடலை மாவை போட்டு பொன்னிறமாக வறுத்து வைத்துக் கொள்ளவும். மற்றொரு பாத்திரத்தில் பால், சர்க்கரையை சேர்த்து பாகு பதத்துக்கு வரும் வரை காய்ச்ச வேண்டும்.

பாகுவில் ஏற்கனவே வறுத்து வைத்த கடலை மாவு போட்டு, கை விடாமல் கிளறவும். கலவை கெட்டியாக துவங்கியதும், அதில் ஹார்லிக்சை போட்டு நன்றாக கிளறவும். மிச்சமுள்ள நெய்யை சிறிது சிறிதாக ஊற்றி கிளறவும். அனைத்தும் திரண்டு வந்ததும் அகலமான தட்டில் நெய் தடவி, கலவையை பரப்பவும்.

அதன் மீது பாதாம் துண்டுகளை துாவவும். ஐந்து நிமிடங்கள் கழித்து விருப்பமான வடிவில் வெட்ட வேண்டும். சுவையான ஹார்லிக்ஸ் பர்பி தயார். குட்டீஸ்கள் விரும்பி சாப்பிடுவர்.


விருந்தினர்கள் வரும்போது ஹார்லிக்ஸ் பர்பி செய்து கொடுத்து அசத்துங்கள். உங்களுக்கு பாராட்டு கியாரண்டி

- நமது நிருபர் -.

Advertisement