அறுசுவை அறிவிப்பு கட்டுரை..

கோங்குரா பச்சடி என்பது சோரல் இலைகள், பூண்டு, வெந்தயம், மசாலா பொருட்கள் வைத்து தயாரிக்கப்படும் ஒரு வகையான சட்னி ரெசிபியாகும். கோங்குரா என்ற பெயரை கேட்டாலே, ஆந்திரா உணவு பற்றி தெரிந்து இருப்பவர்கள் வாயில் எச்சில் ஊற வைக்கும்.
சோரல் இலைகளில் பொட்டாசியம் இருப்பதால் ரத்த அழுத்தம் சீராக இருக்க உதவும். வைட்டமின் 'ஏ' மற்றும் கரோட்டின் கண்பார்வை, கண் ஆரோக்கியத்தை மேம்படுத்தவும் உதவுகின்றன.
இரைப்பை, குடல் பிரச்னையையும் மேம்படுத்துகிறது. கோங்குரா பச்சடியை எப்படி செய்வது என்று பார்க்கலாம்.
செய்முறை
அடுப்பை ஆன் செய்து வாணலியை வைத்து, நான்கு டீஸ்பூன் நல்லெண்ணெய் ஊற்றவும். எண்ணெய் சூடானதும் கடுகு, வெந்தயம் சேர்க்க வேண்டும். கடுகு நன்கு வெடிக்க ஆரம்பித்து, வெந்தயம் வெளிர் பழுப்பு நிறமாக மாறிய பின், சீரகத்தை சேர்த்து 10 வினாடிகள் வதக்கவும்.
பூண்டு, காய்ந்த மிளகாய் சேர்த்து அடுப்பை, 'சிம்'மில் வைத்து 30 வினாடிகள் வதக்கவும். இப்போது சோரல் இலைகளை சேர்த்து, எண்ணெயில் வதக்க வேண்டும். இலை சுருங்கும் வரை வதக்கிக் கொண்டே இருக்க வேண்டும்.
இலைகளை கருப்பாக மாற விடக்கூடாது. தேவைக்கு ஏற்ப மஞ்சள், மிளகாய் பவுடர் சேர்த்து வதக்கவும். பின், அரை டீஸ்பூன் வெல்லம் சேர்த்து அடுப்பை அணைக்கவும்.
இந்த கலவையை சிறிது நேரம் ஆற வைத்து விட்டு, பின் மிக்ஸியில் போட்டு அரைக்கவும். அப்போது தண்ணீர் சேர்க்க வேண்டாம்.
அரைத்து முடித்த பின் ஒரு டப்பாவில் போட்டு காற்று புகாதபடி அடைத்துக் கொள்ளலாம். ஒவ்வொரு முறை பச்சடியை எடுக்கும்போதும், சுத்தமான கரண்டி பயன்படுத்த வேண்டும். இந்த பச்சடியை சூடான சாதத்துடன் கிளறி சாப்பிட்டால் சுவை அருமையாக இருக்கும்.
மேலும்
-
டில்லி வீரர்கள் அபாரம்; குஜராத்துக்கு 204 ரன்கள் இலக்கு
-
நக்சல்களின் 12 பதுங்கு குழிகள் அழிப்பு: சத்தீஸ்கரில் பாதுகாப்பு படை தீவிரம்
-
காசாவில் இஸ்ரேல் தொடர் தாக்குதல்; 48 மணி நேரத்தில் 90 பேர் பலி
-
பிரதமர் மோடியுடன் பேசியது கவுரவம்: எலான் மஸ்க் பெருமிதம்
-
விசைத்தறியாளர்கள் போராட்டம்: பா.ஜ., ஆதரவு
-
8 வயது சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை; 10ம் வகுப்பு மாணவன் கைது