சமையல் மணக்க டிப்ஸ்

சமைக்கும்போது கொத்தமல்லி இலை, கறிவேப்பிலை சேர்ப்பதற்கு பதிலாக சமைத்து முடித்த பின் சேர்த்தால், அதன் முழு சத்துக்களும் நமக்கு கிடைக்கும்.

இடியாப்ப மாவு பிசையும்போது, முக்கால் பங்கு தண்ணீர், கால் பங்கு பால் ஊற்றி பிசைந்தால், இடியாப்பம் வெள்ளையாக பஞ்சு போல கிடைக்கும்.

உருளைக்கிழங்கில் வறுவல் செய்யும்போது, கொஞ்சம் சோம்பை பவுடராக்கி துாவினால் சுவையும், மணமும் நன்றாக இருக்கும்.

மோர் குழம்பு செய்யும்போது, கடைசியாக தாளிப்புக்கு தேங்காய் எண்ணெய் பயன்படுத்தினால், குழம்பு சுவையாக இருக்கும்.

சுண்டைக்காய் குழம்பு செய்யும்போது, நல்லெண்ணெய் ஊற்றி தாளித்தால் குழம்பின் சுவையும், மணமும் கூடுதலாக இருக்கும்.

புட்டு செய்யும்போது பச்சை வாசனை வராமல் இருக்க, புட்டுக்கு அரிசி ஊற வைக்கும்போது, அரிசியை லேசாக வறுத்துக் கொள்ளலாம்.

சாம்பாருக்கு பருப்பு வேக வைக்கும்போது அதனுடன், ஒரு டேபிள் ஸ்பூன் கொள்ளு சேர்த்து வேக வைத்தால், உடம்பில் கொழுப்பு சேராமல் இருக்கும்.

Advertisement