அட்டகாசமான சுவையில் இறால் புலாவ்

செய்முறை



முதலில் இறாலை சுத்தம் செய்ய வேண்டும். இதை மஞ்சள் துாள் சேர்த்து 20 நிமிடங்கள் வரை ஊறவைக்கவும்.

ஒரு வாணலியில் எண்ணெய் ஊற்ற வேண்டும். அதில் இறாலை போட்டு பொன்னிறமாக வறுத்து தனியாக எடுத்துக் கொள்ளவும். இதன் பின், வாணலியில் நெய்யை ஊற்ற வேண்டும். அதில், கிராம்பு, ஏலக்காய், பிரியாணி இலை, பச்சை மிளகாய், வெங்காயம், தக்காளி போட்டு லேசாக வதக்கவும்.

இதில், இஞ்சி பூண்டு விழுது சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்கவும். தீயை லேசாக குறைத்து, மிளகாய்த்துாள், சீரகத்துாள், கொத்தமல்லி ஆகியவை சேர்த்து லேசாக வதக்கவும்.

இந்த கலவையில் வேகவைத்த அரிசியை போட்டு நன்றாக கிண்டவும். இதன் பின், இறாலை போட்டு தேவையான அளவு தண்ணீரை ஊற்றி கொதிக்க வைக்கவும். வாணலியை தட்டால் மூடி வைக்கவும்.அரிசி வேகும் வரை 15 முதல் 25 நிமிடங்கள் வரை பொறுமையாக காத்திருக்கவும். பிறகு அடுப்பை நிறுத்திவிட்டு மூடியை திறந்து, இறால் புலாவை பரிமாற வேண்டியது தான். தயிர் பச்சடி தயாரித்து தொட்டு சாப்பிட்டால் சுவை அட்டகாசம்.

Advertisement