பல் மருத்துவமனை திறப்பு விழா

தேனி; தேனி சமதர்மபுரத்தில் டிடி பல் மருத்துவமனையை டாக்டர் ஸ்ரீவசீகரனின் பெற்றோர் தெய்வராஜன் - தேவி திறந்து வைத்தனர்.

நிகழ்வில் அரசு ஒப்பந்ததாரர் சன்னாசி, தேனி பிளைவுட்ஸ் ராஜசேகரன், விஜய்பாபு குத்துவிளக்கு ஏற்றினர். தமிழ்நாடு வணிகர் சங்கங்கள் பேரமைப்பின் தேனி மாவட்டத் தலைவர்செல்வக்குமார், நிர்வாகிகள் திருவரங்கப்பெருமாள், அருஞ்சுனைக்கண்ணன், தேனி மேலப்பேட்டை இந்து நாடார்கள் உறவின்முறை தலைவர் ராஜமோகன், நிர்வாகிகள் கணேஷ், ஆனந்தவேல்,பழனியப்பன், நட்டாத்தி நாடார்கள் உறவின்முறை செயலாளர் கமலக்கண்ணன், 'செடாய் 'தேனிமண்டல இயக்குனர் சுதந்திரராஜன், தொழில் உரிமையாளர்கள் பரத்குமார், சரவணக்குமார், ராமராஜ், கார்த்திகேயன், ராதாகிருஷ்ணன், முரளிதரன், முருகன், அசோக், லட்சுமிகாந்தன், ரமேஸ் கண்ணையன், சூர்யா, அன்பழகன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். இங்கு அதிநவீன பல் சிகிச்சைக்கானஅனைத்து உபகரணங்களுடன், அனைத்துவிதமான பல் சிகிச்சைகளும் மேற்கொள்ளப்படும் என,டாக்டர் ஸ்ரீவசீகரன் தெரிவித்தார்.

Advertisement