மாவட்ட அளவிலான கிக் பாக்சிங்; மாணவர்கள் அசத்தல்

மதுரை;மதுரை டால்பின் பள்ளியில் மாவட்ட அளவிலான கிக் பாக்சிங் சாம்பியன்ஷிப் போட்டி நடந்தது. பல்வேறு பள்ளிகளின் 250 மாணவர்கள் கலந்து கொண்டனர்.இதில் பாயின்ட் பைட், லைட் கான்டாக்ட், லோ கிக், மியூசிக்கல் பார்ம், கிரியேட்டிவ் பார்ம் ஆகிய பிரிவுகளில் போட்டிகள் நடந்தன.
ரைசிங் சாம்பியன்ஸ் தற்காப்பு கலை பயிற்சி பள்ளி மாணவர்கள் 41 தங்கம், 19 வெள்ளி, 15 வெண்கலம் வென்றனர். யங்கர் காடட் பிரிவில் நந்தித்தா 3 தங்கம், நவீன் 2 தங்கம், ஸ்ரீ ஷ்ரவன் ஒரு தங்கம், ஒரு வெள்ளி, தஸ்வந்த் தங்கம், லித்திகா வெள்ளி, பிரசன்னா 2 வெண்கலம், பொன்னாபரணன் வெண்கலம், துருவபாலா வெண்கலம் வென்றனர்.
ஓல்டர் காடட் பிரிவில் ஜீவிதா, செந்துாரன், கவின் நரசிம்மன், ஆதி தேவ், கவின் கண்ணா, ஜெய்தா, தர்ஷினி தலா இரண்டு தங்கமும்,ராம் யுகேஷ், இசைவாணி, விக்னேஸ்வரன், முபித் முகமத், சாதனாஸ்ரீ ஒரு தங்கம் ஒரு வெள்ளியும், யோகேஷ், ஹரிஷ்பாண்டி, ஜெயசுதன்,
அஸ்வந்த் ஆகியோர் இரண்டு வெள்ளி பதக்கமும், கவிசந்தோஷ், அஸ்வின் வெண்கல பதக்கமும் வென்றனர்.ஜூனியர் பிரிவில் ராம்ராஜ் 2 தங்கம், ஆதில் ஒரு தங்கம், ஒரு வெள்ளி, கீர்த்தனா, கதிர்வேல் தலா ஒரு தங்கம், 2 வெள்ளி, விஷ்ணு 2 வெள்ளி பதக்கம் வென்றனர். சீனியர் பிரிவில் கார்த்திகேயன் 2 தங்கம், ஒரு வெள்ளி, தீபக்நாராயணன் 2 தங்கம், கேசவன், மதன் தலா ஒரு தங்கம், ஒரு வெள்ளியும் வென்றனர்.வெற்றி பெற்ற மாணவர்களை மாவட்ட கிக் பாக்ஸிங் தலைவர் நாராயணன், பயிற்சியாளர் கவுரி சங்கர் பாராட்டினர்.
தங்கம் வென்றவர்கள் மாநில கிக் பாக்ஸிங் போட்டிக்கு தேர்வாகியுள்ளனர்.
மேலும்
-
டில்லி வீரர்கள் அபாரம்; குஜராத்துக்கு 204 ரன்கள் இலக்கு
-
நக்சல்களின் 12 பதுங்கு குழிகள் அழிப்பு: சத்தீஸ்கரில் பாதுகாப்பு படை தீவிரம்
-
காசாவில் இஸ்ரேல் தொடர் தாக்குதல்; 48 மணி நேரத்தில் 90 பேர் பலி
-
பிரதமர் மோடியுடன் பேசியது கவுரவம்: எலான் மஸ்க் பெருமிதம்
-
விசைத்தறியாளர்கள் போராட்டம்: பா.ஜ., ஆதரவு
-
8 வயது சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை; 10ம் வகுப்பு மாணவன் கைது