இருளில் தவித்த மதுரை

மதுரை; மதுரை பசுமலை மின் பகிர்மான நிலையத்தில் நேற்று இரவு 9:20 மணியளவில் திடீரென ஏற்பட்ட பழுதால் பசுமலை, பைக்காரா,டி.வி.எஸ்., நகர், பழங்காநத்தம், மாடக்குளம், நேரு நகர், மேல அனுப்பானடி ஹவுசிங் போர்டு உள்ளிட்ட நகரின் பல்வேறு பகுதிகளில் ஒரு மணி நேரத்துக்கு மேலாக மின்தடை ஏற்பட்டது. கோடை வெப்பத்தால் மக்கள் தவித்த நிலையில் மின்தடையால் துாக்கமின்றி அவதிப்பட்டனர்.

Advertisement