அதிகாரிகளுக்கு சங்கீத் நகரின் சங்கடம் தெரியுமா; தத்தளிக்கும் தத்தனேரி பகுதி குடியிருப்போர்

மதுரை; மதுரை மாநகராட்சி வார்டு 3 தத்தனேரி சங்கீத் நகரில் முழுமை பெறாத பாதாளச்சாக்கடை, மழைநீர் வடிகால் திட்டம், சமூக விரோதிகளின் அச்சுறுத்தலால் குடியிருப்போர் அவதிப்படுகின்றனர்.
சங்கீத் நகர் 1 முதல் 5 தெருக்கள், விரிவாக்கப்பட்ட சீனிவாசன் நகர் உள்ளிட்ட பகுதிகளில் 3 ஆயிரத்திற்க்கும் மேற்பட்டோர் வசிக்கின்றனர். சங்கீத் நகர் குடியிருப்போர் சங்கத் தலைவர் சொக்கலிங்கம், செயலாளர் உலகநாதன், பொருளாளர் செந்தில்குமார், துணைத் தலைவர் ஜெகதீசன், இணைச் செயலாளர் சேதுராமன், கோபாலகிருஷ்ணன், பகத்சிங் கூறியதாவது:
பாதாளச் சாக்கடைக்கு இணைப்பு கொடுக்காததால் மாதம்தோறும் துார்வாரப்படுகிறது. பைப் லைன்களளை பம்பிங் ஸ்டேஷனுடன் இணைத்தால் திட்டம் முழுமை பெறும். காலி மனைகளில் கழிவுநீர் தேங்கி கொசு உற்பத்தியாகிறது. மழைநீர் வடிகாலை இன்றைய மக்கள் தொகைக்கேற்ப மாற்ற வேண்டும். தெருநாய்கள், மாடுகள் அச்சுறுத்தலாக உள்ளன. மாடுகளின் உரிமையாளர்கள் கண்டுகொள்வதே இல்லை.
கண்மாய் சீரமைக்கப்படுமா
காலிமனையிலும், சிலையனேரி கண்மாயிலும் முட்புதர்கள் வளர்ந்து பாம்பு உள்ளிட்ட விஷஜந்துகள் உள்ளன. இரவில் சமூக விரோதிகள் சமூக விரோத செயல்களில் ஈடுபடுகின்றனர். செடிகளை அகற்றி கண்மாயை பாதுகாக்க வேண்டும். நடைப்பயிற்சி செய்ய ஏதுவாக சுற்றிலும் தளம், விளக்கு அமைத்து கொடுத்தால் பயன்பெறுவோம்.
கண்காணிப்பு கேமராக்களை முக்கிய இடங்களில் அமைத்தால் சமூக விரோதிகள் தொல்லை குறையும்.
செக்போஸ்ட் மாற்றி அமைக்கலாம்
கரிசல்குளம் கண்மாய் அருகே செக் போஸ்ட் உள்ளது. பலர் இதற்காக கனரக வாகனங்களை மெயின் ரோட்டை விடுத்து சங்கீத் நகருக்குள் திருப்புவதால் ரோடு சேதமடைவதுடன், இரவில் அதிக ஒலியுடன் செல்வதாலும் எரிச்சலாக இருக்கிறது.
செக்போஸ்ட்டை எங்கள் தெருவிற்கு இடைப்பட்ட பகுதியில் வைக்க வேண்டும். இதனால் சிட்டுக்குருவிகள் வருகை குறைந்துவிட்டன.
சுகாதார மையம் வேண்டும்
செல்லையா நகர், ஜேசுதாசன் நகர் உள்ளிட்ட பகுதியினர் ஆனையூர் சுகாதார மையம் செல்கிறார்கள். இப்பகுதியில் பொது சுகாதார மையம், நுாலகம் அமைக்க வேண்டும். தனியார் மூலம் 4 ஆண்டுகளாக ஒரு குடம் ரூ. 12க்கு குடிநீர் பெறுகிறோம்.
அம்ரூத் திட்டத்தில் குழாய்கள் அமைத்துள்ளனர். திட்டத்தை அமல்படுத்தும் வரை மாநகராட்சி சார்பில் குடிநீர் வழங்க வேண்டும் என்றனர்.
மேலும்
-
டில்லி வீரர்கள் அபாரம்; குஜராத்துக்கு 204 ரன்கள் இலக்கு
-
நக்சல்களின் 12 பதுங்கு குழிகள் அழிப்பு: சத்தீஸ்கரில் பாதுகாப்பு படை தீவிரம்
-
காசாவில் இஸ்ரேல் தொடர் தாக்குதல்; 48 மணி நேரத்தில் 90 பேர் பலி
-
பிரதமர் மோடியுடன் பேசியது கவுரவம்: எலான் மஸ்க் பெருமிதம்
-
விசைத்தறியாளர்கள் போராட்டம்: பா.ஜ., ஆதரவு
-
8 வயது சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை; 10ம் வகுப்பு மாணவன் கைது