போட்டி தேர்விற்கு வழிகாட்டல் நிகழ்ச்சி

கடலுார்; கடலுார் அகவை முதிர்ந்த தமிழறிஞர் முன்னேற்ற சங்கம், கடலுார் செந்தமிழ் இலக்கிய பேரவை மற்றும் முதுநகர் வடக்கு அரசு நுாலகம் சார்பில் போட்டித்தேர்வுகள் எழுத சிறப்பு இலவச பயிற்சி அளிக்கப்பட்டது.

ஓய்வுபெற்ற அரசு ஊழியர் சங்கத்தலைவர் சுந்தர்ராஜா தலைமை தாங்கினார். நுாலகர் பாலம்மாள் வரவேற்றார்.

ஓய்வுபெற்ற நுாலகர் சந்திரசேகர், வாழ்த்துரையாற்றினார்.

அகவை முதிர்ந்த தமிழறிஞர்கள் முன்னேற்ற நலச்சங்கம், செந்தமிழ் இலக்கியப் பேரவை மாநிலத்தலைவர் செந்தாமரை, சிறப்பு விருந்தினராக பங்கேற்றார்.

விழாவில் ஓய்வுபெற்ற அரசு ஊழியர் சங்கத்தலைவர் சுந்தர்ராஜாவிற்கு, வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கப்பட்டது. அரியலுார் மாவட்ட தமிழறிஞர் பழனியப்பன் எழுதிய நீங்களும் ஐ.ஏ.எஸ்., ஆகலாம் என்ற நுால் வெளியிடப்பட்டது.

கருத்தரங்கில் ஐ.ஏ.எஸ்., மற்றும் ஐ.பி.எஸ்., தேர்வுகளை எழுதுவது குறித்து தமிழறிஞர் செந்தாமரை, சிறப்புரையாற்றினார்.

நிகழ்ச்சியில் பெற்றோர்கள், மாணவர்கள் உட்பட பலர் பங்கேற்றனர்.

சூரியகாந்த் நன்றி கூறினார்.

Advertisement