சிதம்பரத்தில் ரூ.2.68 கோடியில் குளம் துார்வாரும் பணி; சேர்மன் துவக்கி வைப்பு

சிதம்பரம்; சிதம்பரம் நகராட்சியில் இரண்டு புதிய குளங்கள் துார் வாரி புரனமைக்கும் பணியை நகரமன்ற சேர்மன் செந்தில்குமார் துவக்கி வைத்தார்.
சிதம்பரம் நகராட்சியில், கலைஞர் நகர்புற மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ஓமக்குளம், நாகசேரி குளங்கள் சீரமைக்க 2.68 கோடி நிதி ஒதுக்கீடு செய்து, நேற்று பணிகள் துவக்க விழா நடந்தது. நகர மன்ற சேர்மன் செந்தில்குமார் அடிக்கல் நாட்டி துவக்கி வைத்தார். நிகழ்ச்சியில் நகராட்சி கமிஷனர் மல்லிகா, பொறியாளர் சுரேஷ், தி.மு.க., நகர மன்ற கொறடா ஜேம்ஸ் விஜயராகவன், நகர மன்ற துணைத் தலைவர் முத்துக்குமரன்.
மூத்த கவுன்சிலர்கள் ரமேஷ், மக்கின், அப்பு சந்திரசேகர், மணிகண்டன், அறிவழகன், தில்லை சரவணன், வெங்கடேசன், கல்பனா சண்முகம், தி.மு.க., நகர துணை செயலாளர் பாலசுப்ரமணியன், இளங்கோவன் மற்றும் விஜயா, நகர இளைஞரணி அமைப்பாளர் மக்கள் அருள், தொழில்நுட்ப பிரிவு ஸ்ரீதர், நிர்வாகிகள் ரமேஷ், கமலநாதன், முகமது இஸ்மாயில், மாரியப்பன், சிவா சண்முகம், முருகேசன், ராயல் ராஜா, ஜனார்த்தனன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
ஒப்பந்ததாரர் சண்முகசுந்தரம் நன்றி கூறினார்.
மேலும்
-
டில்லி வீரர்கள் அபாரம்; குஜராத்துக்கு 204 ரன்கள் இலக்கு
-
நக்சல்களின் 12 பதுங்கு குழிகள் அழிப்பு: சத்தீஸ்கரில் பாதுகாப்பு படை தீவிரம்
-
காசாவில் இஸ்ரேல் தொடர் தாக்குதல்; 48 மணி நேரத்தில் 90 பேர் பலி
-
பிரதமர் மோடியுடன் பேசியது கவுரவம்: எலான் மஸ்க் பெருமிதம்
-
விசைத்தறியாளர்கள் போராட்டம்: பா.ஜ., ஆதரவு
-
8 வயது சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை; 10ம் வகுப்பு மாணவன் கைது