புனித வெள்ளி ரத்த தான முகாம் 

சேத்தியாத்தோப்பு; சேத்தியாத்தோப்பு அடுத்த பாளையங்கோட்டை புனித ஜெபமாலை அன்னை ஆலயத்தில் புனித வெள்ளி ரத்த தான முகாம் நடந்தது.

முகாமினை, ஆலய பங்கு தந்தை அகஸ்டின் தலைமை தாங்கி துவக்கி வைத்தார்.

சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழக மருத்துவக்கல்லுாரி ரத்த வங்கி குழுவினர், ஆலய பங்குதந்தைகள், இளைஞர்கள் முன்னிலை வகித்தனர்.

முகாமில் சுற்றியுள்ள இளைஞர்கள் பெண்கள் உள்ளிட்ட 100க்கும் மேற்பட்டோர் ரத்த தானம் செய்தனர்.

முகாமில், மருத்துவக்குழுவினர், செவிலியர்கள், ரத்த வங்கியினர் மற்றும் ஆலய வழிபாட்டினர் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

Advertisement