மாரியம்மன் திருவீதி உலா




பனமரத்துப்பட்டி:மல்லுார் மாரியம்மன் கோவில் சித்திரை திருவிழாவை ஒட்டி, அகரம் வெள்ளான் செட்டியார் நல சங்கம் சார்பில் நேற்று, அம்மனுக்கு பால் குட அபிேஷகம் நடந்தது. தொடர்ந்து சிறப்பு அலங்காரம் செய்து தீபாராதனை காட்டினர்.


பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இரவில் அம்மன் சிறப்பு அலங்காரத்தில் திரு வீதி உலா நடந்தது. அதற்கு முன், தப்பாட்ட குழுவினர் நிகழ்ச்சி நடந்தது. சங்கத்தலைவர் சுகுமார், செயலர் விஜயகுமார், இளைஞரணி, மக்கள் அணி, ஊர்மக்கள் பங்கேற்றனர்.

Advertisement