ராஜமலை போட்டோ பாய்ண்ட்டில் போஸ் கொடுக்கும் வரையாடுகள்

மூணாறு : ராஜமலையில் 'போட்டோ பாய்ண்ட்' டில் போட்டோவுக்கு 'போஸ்' கொடுக்கும் வகையில் சுற்றித்திரியும் வரையாடுகள் சுற்றுலா பயணிகளை வெகுவாக கவர்ந்து வருகிறது.

மூணாறு அருகில் உள்ள இரவிகுளம் தேசிய பூங்காவில் அபூர்வ இன ' வரையாடு' ஏராளம் உள்ளன. அவற்றை பார்க்க பூங்காவுக்கு உட்பட்ட ராஜமலைக்கு சுற்றுலா பயணிகளை வனத்துறையினர் அனுமதிக்கின்றனர். ராஜமலையில் வரையாடுகள் மட்டும் இன்றி பயணிகள் பொழுது போக்கிற்கு பல்வேறு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. அங்கு பயணிகள் செல்லும் இறுதி பகுதியில் ராஜமலையின் அடையாளமான வரையாட்டின் உருவம், இரவிகுளம் தேசிய பூங்கா என ஆங்கிலத்தில் பொறிக்கப்பட்ட எழுத்துகள்'ஆகியவற்றுடன்' போட்டோ பாய்ண்ட்' அமைக்கப்பட்டுள்ளது. அதில் அமர்ந்து பயணிகள் போட்டோ, செல்பி எடுத்து கொள்கின்றனர். அவ்வப்போது போட்டோவுக்கு ' போஸ்' கொடுப்பது போன்று சுற்றித்திரியும் வரையாடுகள் சுற்றுலா பயணிகளை வெகுவாக கவர்ந்து வருகின்றன.

Advertisement