எலுமிச்சம்பழம் விலை 13 ரூபாய்

திருப்புவனம் : திருப்புவனத்தில் நேற்று ஒரு எலுமிச்சம்பழத்தின் விலை 13 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டதால் பொதுமக்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
தமிழகத்தில் கோடை வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ளது. பொதுமக்கள் வெயிலின் தாக்கத்தை தணிக்க பழச்சாறு, இளநீர், சர்பத் உள்ளிட்டவற்றை வாங்கி அருந்தி வருகின்றனர்.
வெயில் காலத்தில் எலுமிச்சம்பழ சாறு அருந்தினால் வெப்பம் தணியும். மேலும் சர்பத் தயாரிக்க எலுமிச்சம்பழம் தேவை, மதுரை மார்க்கெட்டிற்கு பேரையூர் மற்றும் தென்காசி மாவட்டத்தில் இருந்து எலுமிச்சம்பழம் விற்பனைக்கு கொண்டு வரப்படுகிறது.
தேவை அதிகரித்துள்ளதாலும் வரத்து குறைந்ததாலும் விலை அதிகரித்துஉள்ளது. 40 கிலோ எடை கொண்ட ஒரு மூடை பழம் நான்காயிரம் ரூபாயில் இருந்து ஏழாயிரம் ரூபாயாக உயர்ந்துள்ளது. எலுமிச்சம்பழத்தின் குறைந்த பட்ச விலையே 10 ரூபாயில் தொடங்குகிறது. பெரிய பழம் 13 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.
எலுமிச்சம்பழத்தின் விலை அதிகரித்ததை தொடர்ந்து சர்பத்தின் விலையும் 25 ரூபாயில் இருந்து 35 ரூபாயாக உயர்ந்துள்ளது. நடுத்தர மக்களுக்கு இந்த விலை உயர்வு கடுமையாக பாதித்துள்ளது.
ஆப்பிள், மாதுளை உள்ளிட்ட பழச்சாறுகளின் விலை 70 ரூபாயில் தொடங்கி 100 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுகிறது.
மேலும்
-
டாக்டராவது உங்களது லட்சியமா?: வாருங்கள் வழிகாட்டுகிறது 'தினமலர்'
-
தி.மு.க.,வுக்கு சாதகமில்லாததால் கூட்டுறவு தேர்தல் தள்ளிவைப்பு
-
தமிழகம், புதுச்சேரியில் 25 வரை மிதமான மழை
-
கல்வான், சியாச்சினில் அலைபேசி சேவை 18,000 அடியில் 5ஜி சேவை வழங்கி சாதனை
-
மருதமலையில் 184 அடி உயர முருகன் சிலை: ரூ.110 கோடியில் பணி விரைவில் துவக்கம்
-
'அவுரங்கசீப் மதவெறி பிடித்தவர் என நேருவே குறிப்பிட்டுள்ளார்': ராஜ்நாத் சிங்