பா.ஜ., பிரமுகர் கைது





கரூர்:கரூர் மாவட்டம், சின்ன ஆண்டாங்கோவில் முத்துநகர் பகுதியை சேர்ந்த மகாலிங்கம் மகன் தமிழ்செல்வன், 35; பா.ஜ., பிரமுகர். இவருக்கு கடந்த, ஏழு ஆண்டுகளுக்கு முன் சத்யா, 30; என்ற பெண்ணுடன் திருமணம் நடந்தது. ஒரு குழந்தை உள்ளது. கடந்த, 15 இரவு குடிபோதையில் வீட்டுக்கு சென்ற தமிழ்செல்வன், குழந்தையை சரிவர பராமரிப்பது இல்லை என, மனைவி சத்யாவிடம் தகராறு செய்துள்ளார்.


அப்போது, தமிழ்செல்வனுக்கும், சத்யாவுக்கும் தகராறு ஏற்பட்டது. ஆத்திரமடைந்த தமிழ்செல்வன், உருட்டு கட்டையால், மனைவி சத்யாவை சரமாரியாக அடித்துள்ளார். அதில், படுகாயமடைந்த சத்யா, கரூர் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார். இதுகுறித்து, சத்யா அளித்த புகார்படி, நேற்று இரவு தமிழ்செல்வனை, கரூர் டவுன் போலீசார் கைது செய்து விசாரிக்கின்றனர்.

Advertisement