எமனேஸ்வரம் உய்ய வந்தாள் அம்மன் கோயில் பொங்கல் விழா

பரமக்குடி : பரமக்குடி எமனேஸ்வரம் உய்ய வந்தாள் அம்மன் கோயில் பொங்கல் விழா நடந்தது.
பரமக்குடி நகராட்சி எமனேஸ்வரம்- இளையான்குடி ரோட்டில் அமைந்துள்ள இக்கோயிலில் நேற்று முன்தினம் இரவு பூச்சொரிதல் விழா நடந்தது.
பல்வேறு இடங்களில் பக்தர்கள் பூக்களை தட்டுகளில் பரப்பி ஊர்வலமாக எடுத்து கோயிலுக்கு சென்றனர்.
அங்கு மூலவருக்கு வண்ண மலர்களால் அபிஷேக, அலங்காரம் செய்யப்பட்டது. அன்று அக்னி சட்டி எடுத்தும், பொங்கல் வைத்தும் நேர்த்திக்கடனை செலுத்தினர். நேற்று காலை வைகை ஆற்றில் இருந்து ஏராளமானோர் பால்குடம் எடுத்தனர்.
முக்கிய வீதிகளில் வலம் வந்து கோயிலை அடைந்து அம்மனுக்கு அபிஷேகம் நடந்தது. இன்று காலை கருப்பணசாமிக்கு விசேஷ அபிஷேக ஆராதனைகளுடன் விழா நிறைவடைகிறது.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
மருதமலையில் 184 அடி உயர முருகன் சிலை: ரூ.110 கோடியில் பணி விரைவில் துவக்கம்
-
'அவுரங்கசீப் மதவெறி பிடித்தவர் என நேருவே குறிப்பிட்டுள்ளார்': ராஜ்நாத் சிங்
-
செய்திகள் சில வரிகளில்
-
காதலிக்காக என்னை தேர்ச்சி பெற வையுங்கள்; விடைத்தாளுடன் ரூ.500 அனுப்பிய மாணவன்
-
ஆசிரியரிடம் ரூ.15,000 லஞ்சம் பிளாக் கல்வி அதிகாரி கைது
-
பைக் மீது கன்டெய்னர் லாரி கவிழ்ந்ததில் தந்தை, மகள் பலி
Advertisement
Advertisement