சாப்பாடுனு வந்திட்ட சண்டை இல்லை படையப்பா, ஒற்றை கொம்பன் சமாதானம்

மூணாறு : எதிரும், புதிருமாக சண்டையிட்டு கொள்ளும் படையப்பா, ஒற்றை கொம்பன் காட்டு யானைகள் சாப்பாடுனு வந்துட்டா சண்டையிடாமல் சமாதானமாகி விடுகின்றன.
மூணாறு, தேவிகுளம் ஆகிய ஊராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் வனத்துறை கணக்குப்படி 40க்கும் மேற்பட்ட காட்டு யானைகள் உள்ளன.
அவற்றில் படையப்பா, ஊசி கொம்பன், ஒற்றை தந்தங்களைக் கொண்ட இரண்டு ஒற்றை கொம்பன்கள், விரிந்த கொம்பன் உள்பட சில ஆண் காட்டு யானைகள் மிகவும் பிரபலம்.
அவற்றில் எதிரும், புதிருமாக சுற்றித் திரியும் படையப்பா, ஒற்றை கொம்பன்கள் ஆகியவை நேருக்கு, நேர் எதிர் கொண்டால் பலமாக மோதி சண்டையிட்டு கொள்ளும்.
மோதல்: அவை, மூணாறு அருகே கன்னிமலை எஸ்டேட் பகுதியில் கடந்த செப்.3ல், பிப்.5ல் என இருமுறை பலமாக மோதிக் கொண்டன.
இந்நிலையில் மூணாறில் இருந்து கல்லார் எஸ்டேட் செல்லும் ரோட்டில் உள்ள ஊராட்சிக்குச் சொந்தமான குப்பை சேமிப்பு கிடங்கில் காய்கறி, உணவு கழிவுகளை தின்பதற்கு படையப்பா, ஒற்றை கொம்பன்கள் ஆகியவை தனித்தனியாக நாள் கணக்கில் முகாமிடும்.
சமாதானம்: தற்போது அங்கு படையப்பா, ஒற்றை கொம்பன் ஆகியவை கடந்த மூன்று நாட்களாக முகாமிட்டுள்ளன. அவை 'சாப்பாடுனு வந்துட்டா சண்டையில்லை சமாதானம்' என்ற ரீதியில் ஒன்றாக தீவனங்களை தின்று வருகின்றன. அவற்றை வனத்துறை அதிரடி படையினர் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.
மேலும்
-
கல்வான், சியாச்சினில் அலைபேசி சேவை 18,000 அடியில் 5ஜி சேவை வழங்கி சாதனை
-
மருதமலையில் 184 அடி உயர முருகன் சிலை: ரூ.110 கோடியில் பணி விரைவில் துவக்கம்
-
'அவுரங்கசீப் மதவெறி பிடித்தவர் என நேருவே குறிப்பிட்டுள்ளார்': ராஜ்நாத் சிங்
-
செய்திகள் சில வரிகளில்
-
காதலிக்காக என்னை தேர்ச்சி பெற வையுங்கள்; விடைத்தாளுடன் ரூ.500 அனுப்பிய மாணவன்
-
ஆசிரியரிடம் ரூ.15,000 லஞ்சம் பிளாக் கல்வி அதிகாரி கைது