அ.தி.மு.க.., ஆர்ப்பாட்டம்

சிவகாசி : நீட் தேர்வு ரத்து செய்ய ரகசியம் இருப்பதாக பொய் வாக்குறுதி கூறி ஆட்சிக்கு வந்த தி.மு.க., அரசை கண்டித்து மேற்கு மாவட்ட அ.தி.மு.க., சார்பில் சிவகாசி பஸ் ஸ்டாண்டில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. முன்னாள் அமைச்சர் ராஜேந்திரபாலாஜி தலைமை வகித்தார். கருப்புச்சட்டை அணிந்து கையில் மெழுகுவர்த்தி ஏந்தி கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. பொய் வாக்குறுதி அளித்து ஆட்சிக்கு வந்த தி.மு.க., அரசுக்கு எதிராக கோஷம் எழுப்பப்பட்டது. தொடர்ந்து நீட் தேர்வினால் இறந்த 22 மாணவர்களுக்கு மெழுகுவர்த்தி ஏந்தி வீரவணக்கம் செலுத்தப்பட்டது. நிர்வாகிகள், கட்சியினர் கலந்து கொண்டனர்.

Advertisement