டாக்டராவது உங்களது லட்சியமா?: வாருங்கள் வழிகாட்டுகிறது 'தினமலர்'

2

சென்னை: மாணவர்களின் மருத்துவ கனவை நனவாக்கும் வகையில், 'நீட்' தேர்வு குறித்த கருத்தரங்கம் மற்றும் மாதிரி தேர்வு, 'தினமலர்' நாளிதழ் சார்பில், வரும் 26ம் தேதி சென்னையில் நடக்கிறது.

பிளஸ் 2 முடித்த பெரும்பாலான மாணவர்களின் உயரிய கனவுகளில் ஒன்று மருத்துவம் படிப்பது.

அதற்கு வழிகாட்டும் வகையில், 'தினமலர்' நாளிதழும், ராஜலட்சுமி மருத்துவ கல்லுாரியும் இணைந்து, வரும் 26ம் தேதி சனிக்கிழமை காலை 8:00 முதல் மதியம் 1:30 மணி வரை, சென்னை கீழ்ப்பாக்கம் ராஜாஜி வித்யாஷ்ரம் பள்ளி வளாகத்தில், 'நீட்' மாதிரி தேர்வை நடத்துகின்றன.

இதுகுறித்த விழிப்புணர்வு கருத்தரங்கமும் நடத்தப்படுகிறது.

நிகழ்ச்சியின் முக்கிய அம்சங்கள்:

நீட் தேர்வில் அதிக மதிப்பெண் பெறுவதற்கான ஆலோசனைகள், பாடங்களை புரிந்து கொள்வதற்கான வழிகாட்டுதல்களை நிபுணர்கள் வழங்குவர்

ஒவ்வொரு மருத்துவ படிப்புக்கும் தேவையான தகுதிகள், மதிப்பெண்கள் அடிப்படையிலான வாய்ப்புகள், சிறந்த மருத்துவ கல்லுாரிகள் குறித்த தகவல்கள் வழங்கப்படும். இதனால், மாணவர்களும், பெற்றோரும் குழப்பம் அடைவதை தவிர்க்கலாம்

நிகழ்ச்சியில் நடத்தப்படும் நீட் மாதிரி தேர்வில், தேசிய அளவிலான வினாக்கள் இடம் பெறும். இதனால், மாணவர்கள் தங்களின் திறனை அறிவதோடு, நுண்ணறிவையும் பெற முடியும்.

தேர்வின் அடிப்படையில், தனித்தனி மதிப்பீட்டு அறிக்கை வழங்கப்படும். அதன் வாயிலாக, மாணவர்கள் தங்களின் பலம் மற்றும் பலவீனத்தை அறியலாம்

ஆர்.ஜி.ஆர்., அகாடமி இணைந்து வழங்கும் இந்நிகழ்ச்சியில், மாணவர்களுக்கு தன்னம்பிக்கையையும், தைரியத்தையும் தரும் வகையில், மாதிரி தேர்வில் சிறப்பான மதிப்பெண் பெறுவோருக்கு பரிசு வழங்கப்படும்.

இதில் பங்கேற்க விரும்புவோர், 'NEET' என, டைப் செய்து, 95667 77833 என்ற, வாட்ஸாப் எண்ணுக்கு அனுப்பலாம். முன்பதிவு செய்பவர்களுக்கு மட்டுமே அனுமதி

Advertisement