தி.மு.க.,வுக்கு சாதகமில்லாததால் கூட்டுறவு தேர்தல் தள்ளிவைப்பு

கோவை: தற்போதைய அரசியல் சூழ்நிலை தி.மு.க.,வுக்கு சாதகமாக இல்லை' என, உளவுத்துறை கொடுத்துள்ள தகவலால், கூட்டுறவு சங்க தேர்தலை, 2026 சட்டசபை தேர்தலுக்கு பின் நடத்த திட்டமிட்டு இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
தமிழகத்தில், கூட்டுறவு சங்கங்களுக்கு 2018-ல் தேர்தல் நடந்தது; 2023ல் மீண்டும் தேர்தல் நடத்தியிருக்க வேண்டும்; இதுவரை நடத்தப்படவில்லை. அதற்கு, 2018ல் கூட்டுறவு சங்க தேர்தலை சரியாக நடத்தாததே காரணம் என்று, கூறப்பட்டது.
உயர் நீதிமன்ற மதுரை கிளை மற்றும் உயர் நீதிமன்றத்தால் அமைக்கப்பட்ட ஓய்வு பெற்ற உயர் நீதிமன்ற நீதிபதிகளை கொண்ட, கூட்டுறவு வழக்குகளுக்கான மண்டல குழுக்கள் ஆகியவற்றில், பல்வேறு வழக்குகள் தொடரப்பட்டன. இதன் மீதான விசாரணையில், கூட்டுறவு சங்கங்களின் வாக்காளர்களை ஆய்வு செய்து, முறைப்படுத்த உத்தரவிடப்பட்டது.
தமிழ்நாடு கூட்டுறவு தேர்தல் ஆணையம் ஆய்வு செய்த போது, கூட்டுறவு சங்க உறுப்பினர்களின் எண்ணிக்கை, 2.23 கோடியாக இருந்தது.
இறந்த உறுப்பினர்கள் மற்றும் நீதிமன்றம் வழங்கிய அறிவுரைகளின் அடிப்படையில், மீண்டும் உறுப்பினர்களாக இருக்க தகுதியற்றவர்கள் என்ற அடிப்படையில், 44 லட்சம் உறுப்பினர்கள் நீக்கப்பட்டனர்.
அதன்பின், 2023ல் புதிய உறுப்பினர் பட்டியல் வெளியிடப்பட்டது. இரண்டு ஆண்டுக்கு மேலாகியும், இதுவரை தேர்தல் நடத்தப்படவில்லை.
இந்நிலையில், சமீபத்தில் நடந்த செய்தியாளர் சந்திப்பில்
பேசிய அமைச்சர் பெரியகருப்பன், 'கூட்டுறவு சங்கங்களில் போலி உறுப்பினர்களை நீக்கி விட்டு, உண்மையான உறுப்பினர்களை சேர்க்கும் பணி முடிந்ததும், கூட்டுறவு தேர்தல் நடத்தப்படும்' என்று கூறியிருந்தார்.
இதுதொடர்பாக, கூட்டுறவு சங்க அதிகாரிகள் சிலரிடம் விசாரித்த போது, 'கூட்டுறவு சங்க உறுப்பினர் பட்டியல், 2023ல் தயாராகி விட்டது.
இப்போது தேர்தல் நடத்த தமிழக அரசு தயாராக இல்லை. தற்போதுள்ள அரசியல் சூழ்நிலை, தி.மு.க., அரசுக்கு சாதகமாக இல்லை என்று உளவுத்துறை கொடுத்ததகவலால், கூட்டுறவு தேர்தல் தள்ளி போடப்பட்டுள்ளது' என்றனர்.
கூட்டுறவு சங்க முன்னாள் நிர்வாகிகள் கூறுகையில், 'இப்போது கூட்டுறவு சங்க தேர்தல் நடத்தினால், தி.மு.க.,வுக்கு சறுக்கல் ஏற்படும். அதனால், நடத்தாமல் உள்ளனர்' என்றனர்.

மேலும்
-
என்னை தேர்ச்சி பெற வைத்திடுங்கள்: விடைத்தாளில் ரூ.500 உடன் 10ம் வகுப்பு மாணவர்கள் கோரிக்கை
-
போன் பேச்சு ஒட்டு கேட்கும் தமிழக அரசு: நயினார் நாகேந்திரன் குற்றச்சாட்டு
-
நடுவானில் 3 மணி நேரம் வட்டமடித்த விமானம்; ஜம்மு காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா விமர்சனம்
-
நக்சல் இல்லா முதல் கிராமம்; சத்தீஸ்கர் மாநில அரசு அறிவிப்பு
-
மதுரையில் கடத்தப்பட்ட தொழிலதிபர் மீட்பு; ரூ.பல கோடி மதிப்புள்ள சொத்தை அபகரிக்க முயற்சித்த 8 பேர் கைது
-
ஒகேனக்கல்லில் நீர்வரத்து 4000 கன அடியாக உயர்வு